மாஹா சிவராத்திரி நாள் 10-3-2013 ஞாயிற்றுக் கிழமை

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும். சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.

யோக சிவராத்திரி:
திங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது. சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது. இது யோக சிவராத்திரி எனப்படும்.

யோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும். யோக சித்தியை இது வழங்கும். யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.

மகா சிவராத்திரி :
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.

சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது என பொருள் பெறும். சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல லாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார்

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க மகா சிவராத்திரி ஆகும்.

அம்பிகைக்கு சிவன் அருவுருவில் (உத்பவம்) உபதேசம் செய்த ஆகம உபதேச புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடை பிடிக்கும் போது புத்திசாலி குழந்தைகள் அமைவர். குபேரனிடம் இருப்பது போல் வற்றாத செல்வம் கிடைத்து நிலைக்கும். ஒரு வருடம் முழுவதும் ஐந்து பிரிவு சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்திற்கு அமைய “இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுவர்களுக்கு முக்தி அளிப்பேன்” என திருவருட்சம்மதம் அளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும். உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.

சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி.

சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது உத்தம சிவராத்திரி.

காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும் மத்திமம்.

இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அது அதமம்.

இவை தவிர சிவபெருமானுக்குச் சிறப்பான திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய தினங்களும் சிவராத்திரி தினங்களாக கணிக்கப்பட்டு சிவராத்திரி விரதம் அனுட்டிக்கின்றனர்.

சிவராத்திரி விரத முறை :
சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?
சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். பிறகு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இரவில் அபிஷேகப் பிரியரான லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்து,

 

ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும்
பெற்ற ஒரே கிரகம், பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆவார். இவர்
தேவர்களுக்கு எல்லாம் தலைவன். நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம்.
அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று
சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை
பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன.
ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி,
கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை.
அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.

குருபலம்!

திருமணம்
என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய
கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை திருமணத்துக்கு முக்கியமாக
தேவைப்படுகிறது. குருபலம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண
விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள்.

பார்வை பலம்!

குரு எந்த ஸ்தானத்தை
பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை
சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு
இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம்
பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

ஸ்தான தோஷம்!

குரு
முழு சுப கிரகமாக இருப்பதால் ஜோதிட விதிப்படி அவருக்கு ஸ்தான, கேந்திர
தோஷம் ஏற்படுகிறது. குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன்
சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அப்படி சேர்க்கை பெறாமல் தனியாக இருப்பது
சிறப்பானது அல்ல. இதை குறிப்பிடும் வகையில்தான் ‘அந்தணன் தனித்து நின்றால்
அவதிகள் மெத்த உண்டு’ என்ற பழமொழி ஏற்பட்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு
பகவான் நல்ல ஸ்தான ஆதிபத்யம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்து
விட்டால் அந்த ஜாதகத்துக்கு அந்த ஒரு பலமே போதுமானது. கவுரவம்,
செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாக தேடி வரும். ஆன்மீக விஷயங்களில் ஜாதகரை
ஈடுபட வைப்பார்.

மதபோதகர், மத பிரசாரகர், சொற்பொழிவாளர், கதா
கலாட்சேபம் போன்றவற்றில் முன்னிலைப்படுத்துவார். கோயில் கட்டுதல்,
கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தி வைத்தல், அறங்காவலர் பதவி, தர்மஸ்தாபனம்
அமைத்தல் போன்ற பாக்கியத்தை அருள்வார். தலைசிறந்த வக்கீல்களாகவும்,
நீதிபதிகளாகவும் இருப்பவர்கள் குருவின் பரிபூரண அருள் பெற்றவர்களே.
கல்வித்துறை, நிதி, நீதித்துறைகள், வங்கி போன்றவற்றில் பணி செய்யக்கூடிய
பாக்கியத்தை அருள்பவரும் குரு பகவானே.

பரிகாரம்: குரு பகவானின்
பரிபூரண அருள் வேண்டுபவர்கள் அனைத்து முருகன் ஸ்தலங்களுக்கும் சென்று
வணங்கலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து
பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக் கடலை சுண்டல் வழங்கலாம். கும்பகோணம்
அருகில் ஆலங்குடி குரு பரிகார ஸ்தலமாகும். குரு ஜெயந்தி நாளை
கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குரு பகவானை வணங்கி அவரது அருள் கடாட்சம்
பெறுவோமாக.

கைரேகை அமைப்பு!

விரல்கள் அமைப்பில் ஆள்காட்டி விரல்
குரு விரல் ஆகும். இந்த விரல் அடியில் உள்ள மேடு குரு மேடாகும். இந்த
மேட்டில் வளையம் போன்ற ரேகை அமைப்பு இருந்தால் குருவளையம் என்றும்,
‘சாலமன்ரிங்’ என்றும் இதை அழைப்பார்கள். இந்த அமைப்பு உள்ளவர்கள் உயர்ந்த
பதவி, அந்தஸ்தில் இருப்பார்கள். செல்வாக்கு, சொல்வாக்கு இருக்கும்.

குருவின் அம்சங்கள்

கிழமை
: வியாழன்
தேதி : 3, 12, 21, 30
நட்சத்திரம் :
புனர்பூசம், விசாகம்,
பூரட்டாதி
நிறம் :
மஞ்சள்
ரத்தினம் : புஷ்பராகம்
தானியம் : கொண்டைக்

கடலை
உலோகம் : பொன்
(தங்கம்)
ஆடை :
மஞ்சள்
ராசி : தனுசு, மீனம்
உச்ச ராசி : கடகம்
நீச்ச
ராசி : மகரம்

கடவுளுடைய

படைப்புகளில் மானுட வர்க்கத்தில் ஆண், பெண் என இரண்டு ஜாதிகள் உண்டு.

இதையல்லாது ஆணும் பெண்ணும் அல்லாத இரண்டும் கலந்த குணாதிசயம்,

செயல்படுகளையுடைய பிறப்பு என கூறப்படுவது அலி பிறப்பாகும். இவர்களின்

செயல்பாடுகள் செயல்கள் நடவடிக்கைகள் அனைத்தும் பெண்மையின் சுபாவத்தை ஒத்து போகும். இத்தகைய பிறப்புகளுக்கு ஜோதிட

ரீதியான கிரக அமைப்புகளும் உள்ளன சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டால் அந்த ஜாதகன் அலியாக பிறப்பான்.

சனியும் புதனும் இணைந்து இருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து

கொண்டாலும் அவன் அலியின் குணாதிசயங்களை ஒத்து இருப்பான் செவ்வாய்

சூரியனுடன் சேர்ந்து ரிஷபம் துலாம் போன்ற ராசிகளின் தொடர்பு ஏற்பட்டாலும் அல்லது சந்திரனின் அம்சம் பெற்றாலும் அந்த ஜாதகன்

அலியாவான். மேலும் புதனுடைய வீடுகளாகிய , மிதுனம், கன்னி இந்த இரு வீடுகளில் ஒன்று லக்னமாகி  புதன் லக்னத்துக்கு ஆறாம்

வீட்டில் இருக்க அந்த ஆறாம் வீட்டுக்கு அதிபதி லக்கினத்தில் இருக்க அந்த ஜாதகன் ஆண்மைக்குறைவு உடையவனாக அல்லது அலியா

க இருப்பான் இதை அல்லாது ஆன்மீக சான்றோர்களும் ரிஷிகளும் பிறக்கும் வாரிசுகள் அலியாக பிறப்பதற்கு ஒரு சில விளக்கங்களை

கொடுத்துள்ளனர். தாம்பத்ய உறவில் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக இணையும் வேளையில் ஆணை விட பெண் அதிக

வலிமையுடையவளாக இருந்தால் அவளுக்கு பிறக்கும் குழந்தை பெண்குழந்தையாகவும் பெண்ணைவிட ஆண் வலிமையுடையவனாக

இருந்தால் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாகவும் ஆண் பெண் இருவருமே சம வலிமையுடையவர்களாக இருந்தால் அந்த சமயத்தில்

உருவாகும் கரு அலி தன்மை உடையதாக பிறக்கும் என்று சொல்லி உள்ளனர்.

உங்கள் வாழ்வில் உங்களை வந்தடைந்துள்ள அனைத்தையும்விட நீங்கள் தான் முக்கியமானவர்


தன் மனைவியின் பிறந்த நாளுக்காக ஒரு கணவன் அவளுக்கு ஒரு காரைப் பரிசளித்தான். முதலில் காரின் சாவியையும், பின்னர், அவளது ஓட்டுனர் உரிமம் உட்பட, தேவையான ஆவணங்கள் அடங்கிய ஒரு சிறு பையையும் அவளிடம் கொடுத்துவிட்டு, அவனை ஆரத் தழுவினான். பின் அவளிடம், குழந்தைகளைத் தான் பார்த்து கொள்வதாகவும், அவள் விரும்பினால் நீண்ட தூரம் காரை ஓட்டிச் சென்று வரலாம் என்றும் கூறினான். அவள் ஒரு முத்தத்தால் அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டுத் தன புதிய காரை ஓட்டுச் சென்றாள். ஒரு கிலோமிட்டர் தூரம்  செல்வதற்கு உள்ளாகவே, சாலையை இரண்டாக வகுக்கும் நடுபகுதியில் காரை மோதிவிட்டாள். அவளுக்குக் காயம் ஏதும் ஏற்படாவிட்டாலும் கார் ஒடுக்காகிவிட்டது. குற்றஉணர்வு  அவளைப் பற்றிக் கொண்டது.” அவளிடம் என்ன சொல்வது? அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வார்” போன்ற கவலைகள் அவளை மொய்த்தன. விபத்துப் பகுதிக்குக் காவல்துறை விரைந்து வந்து சேர்ந்தது. காவலர், நான் உங்கள் ஓட்டுனர் உரிமத்தைப் பார்க்கலாமா?” என்று கேட்டார். நடுங்கும் கைகளுடன் தன கணவர் கொடுத்த சிறு பையை அவள் திறந்தாள். கண்களில் கண்ணீர் தாரைதாரையாக ஓடிக் கொண்டிருக்க, ஓட்டுனர் உரிமத்தை அவள் எடுத்தாள். அதன் மீது அவளது கணவரின் கையெழுத்தில் ஒரு துண்டுக் காகிதம் ஒட்டபட்டிருந்தது. அதில், ” என் அன்பே ஒரு வேலை நீ ஏதாவது விபத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தால், இதை நினைவில் வைத்துக்கொள் – நான் நேசிப்பது உன்னைத்தான்; காரை அல்ல – அன்புடன்!” என்று எழுதப்பட்டிருந்தது.

பொருட்களை நேசிக்க வேண்டும். மக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றில்லாமல், மக்களை நேசிக்க வேண்டும். பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று புரிந்து வைத்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்.

காரில் ஏற்படும் ஒரு கீறல் நம் இரத்தக் கொதிப்பை உயர்த்துகிறது. ஆனால், பிறர் இதயத்தில் நாம் ஏற்படுத்தும் கீறல்கள் பற்றி நாம் கவலைபடுவதில்லை. விலையுயர்ந்த கலைப்பொருள் ஒன்றை வேண்டுமென்றே கீழே போட்டு உடைத்துவிட்டு, ” பதினெட்டு வருடங்களாக இது எனக்குப் பயங்கர மன இறுக்கத்தைக் கொடுத்து வந்துள்ளது……  இது விழுந்துவிடுமோ, உடைந்துவிடுமோ என்று பயந்து பயந்து வாழ வேண்டிருந்தது…. யார் உண்மையில் எஜமான் என்று காட்டுவதற்கும் மன நிம்மதியைப் பெறுவதற்குமான வேலை வந்துவிட்டது என்று நான் நினைத்தேன்,” என்று கூறிய ஒரு விபத்தில் சிக்கி உடைந்து நெளிந்துவிட்டது என்பதற்காக ஒரு விருந்து வைத்த இன்னொரு நபரையும் எனக்குத் தெரியும். தான் அப்படிச் செய்ததற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்; ” கார் முற்றிலுமாக நாசமாகிவிட்டது என்றாலும், காரின் உள்ளே இருந்த எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நான் இப்பொழுது நன்றாக இருப்பதால் இன்னொரு காரை என்னால் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் காருக்கு எவ்விதச் சேதமும் ஆகாமல் இருந்து, நான் இறந்து போயிருந்தால் எவ்வித அர்த்தமும் இருந்திருக்காது.”

நமது வாழ்க்கை 60 ரூபாய் பொம்மைக் காரில் துவக்கியது. அது உடைந்தபோது நாம் அழுதோம். பின் 2000 ரூபாய் மதிப்புள்ள ரிமோட் கன்ரோல் காருக்கு நாம் உயர்ந்தோம். அது நாசமானபோதும் நாம் அழுதோம். பின் நமக்கு 20,000 ரூபாய் மதிப்புள்ள, பேட்டரியில் இயங்கும் கார் பரிசாகக் கிடைத்தது. அதன் தன இயக்கத்தை நிறுத்தியதும் நாம் மனமுடைந்தோம். பின் 4 இலட்சம் மதிப்புள்ள கார், 22 இலட்சம் மதிப்புள்ள பெரிய கார், அதன்பின் 86 இலட்சம் பாதிப்புள்ள சொகுசுக் கார் என்று ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. ஒவ்வொரு முறையும் இந்த இயந்திரங்களில் ஒரு கீறல் விழுந்தபோதும், இவை லேசாக நெளிந்தபோதும், நமது இரத்தக் கொதிப்பு வானளாவ உயர்ந்தது. கவலை பெருக்கெடுத்து ஓடியது. மொத்தத்தில் நமது பொம்மைகள் வளர்ந்த அளவு நாம் வளரவில்லை. நாம் எவற்றைக் குறித்து அழுகிறோமோ, அவை மாறியிருக்கிறது. அவ்வளவுதான். அதற்குப் பல புதிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. கோபம், இன்னும் என்னவெல்லாமோ.

நமக்கு மகிழ்ச்சியூட்டத்தான் பொம்மைகள் இருக்கின்றன. பொம்மைகளுக்கு ஒரே ஒரு நோக்கம்தான் உண்டு. நமக்கு உபயோகமாக இருப்பதுதான் அது. உங்களது கடற்கரையோர வீட்டிலிருந்து ஆடம்பரக் கார்வரை, அதிநவீனத் தொழில்நுட்பக் கருவிகள் வரை எல்லாமே உங்கள் வாழ்க்கையை இன்னும் எளிதாக்குவதற்காக மட்டுமே உள்ளன. நீங்கள் சொந்தம் கொண்டாடும் அனைத்துப் பொருட்களையும் விட நீங்கள்தான் மதிப்பானவர். பொருட்களையும்விட நீங்கள்தான் முக்கியமானவர்கள்.

பொம்மை வெறும் சடப் பொருள். பொம்மைகளை வாங்குங்கள். அவற்றை மேலும் மேலும் வாங்கிக் குவியுங்கள். அனால் அவற்றிற்கு அளிக்க வேண்டிய சரியான இடத்தை மட்டும் அவற்றிற்கு வழங்குங்கள். உங்களுக்கு உபயோகமாக இருக்க, உங்கள் வாழ்க்கையை சொகுசானதாக ஆக்கிக் கொள்ள, உங்களை மகிழ்விக்க மட்டுமே அவை இருக்கின்றன. உங்களது பொம்மைகள் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவையாகப்பட்டாலும், அவற்றிற்காக உங்களது விலைமதிப்பற்ற இன்னொரு துளிக் கண்ணீரைச் சிந்தி வீணடிக்காதீர்கள். எல்லாவற்றையும் விட மேலானவர் நீங்கள் தானே?                                                                            – டி. டி. ரங்கராஜன்


பாண்டவர்களின்

தர்ம யுத்த வெற்றிக்காக தன்னுயிரையே பலி கொடுத்த அரவான்!  அரவானின் தியாகம்தான் பாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம்  என்று புராணம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான்.சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் பாரதப்  போருக்காக களப்பலியான கதை சற்று வித்தியாசமானது. பாண்டவர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் போர் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கண்ணன் பல யுக்திகளைக் கையாண்டார்.

பாண்டவர்களில் ஒருவரான ஜோதிட மேதை சகாதேவனைச் சந்தித்தார் கண்ணன். சகாதேவா!  இந்தப் போரில் நாம் வெற்றி பெற வழி என்ன? சாஸ்திரப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். ஓலைச்சுவடிகளை எடுத்து ஆராய்ந்த சகாதேவன்,சாமுத்திரிகா  லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்றான்.  சாமுத்திரிகா லட்சணம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கண்ணன்  யோசித்தார். அப்படிப்பட்டவர்கள் இரண்டே பேர் தான். ஒருவன் அர்ச்சுனன்;  மற்றொருவன் அவன் மகன் அரவான். அர்ச்சுனனை களப்பலி கொடுக்க முடியாது.  ஏனெனில் இந்தப் போருக்கு அச்சாணியாக விளங்குபவன் அவன். வெற்றிவாகை சூடக்கூடிய திறமையும் அர்ச்சுனனிடம் மட்டுமே உள்ளது.

மேலும்  கண்ணனின் தங்கையான சுபத்ராவின் கணவன் அவன். எனவே, அரவாணைத்  தேர்ந்தெடுத்தார் கண்ணபிரான். அரவான் இளைஞன்; அழகன்; அனைத்து அம்சங்களும்  பொருந்தியவன். அரவானைச் சந்தித்த கண்ணபிரான் தன் நிலையைச் சொன்னார்.  மறுபேச்சு பேசாமல் களப்பலிக்குத் தயார் என்று சம்மதம் தெரிவித்தவன், அதே  சமயம் இரண்டு நிபந்தனைகளும் விதித்தான். நான் திருமணமாகாதவன். பெண் சுகம்  என்றால் என்னவென்று அறியாதவன். ஆகவே, என்னை எவளாவது ஒருத்தி திருமணம்  செய்து கொள்ள வேண்டும். அவளுடன் நான் ஓரிரவாவது மகிழ்ச்சியாக இருக்க  வேண்டும். அடுத்து களப்பலி ஆனதும் வெட்டுப்பட்ட என் தலைக்கு போர் முடியும்  வரை போர்க்காட்சிகளைக் காணும் சக்தியைத் தர வேண்டும். இந்த இரண்டு  நிபந்தனைகளுக்கும் ஏற்பாடு செய்தால் நாளைக்கே நான் களப்பலிக்குத் தயார் என்றான். கண்ணன் யோசித்தார். இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றி விடலாம். ஆனால் முதல் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது? நாளை சூரிய உதயத்தில் போர் ஆரம்பமாகப் போகிறது. விடியற்காலையில் களப்பலியாகப் போகும் அரவானை எந்தப் பெண் மணப்பாள்? ஆழ்ந்து சிந்தித்தார். பிறகு அவனிடம், உன் ஆசைகள் நிறைவேறும். இன்றிரவு உன்னைத் தேடி ஓர் அழகிய பெண் வருவாள். அவளை நீ காந்தர்வ விவாகம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இரு. அதோ, அங்கே தெரிகிறது பார் ஒரு மாளிகை. அங்கு நீ அவளை எதிர்நோக்கி இருக்கலாம் என்றார். அரவானும்  மகிழ்ச்சியுடன் அந்த மாளிகையை நோக்கிச் சென்றான். மாலை நேரம் முடிந்து

இரவு  மெள்ள மெள்ள தலை காட்டியது. அப்பொழுது, அரவான் தங்கியிருந்த மாளிகை நோக்கி  ஒரு அழகிய பெண் சென்றாள். அவள் நடந்து வரும் அழகை ரசித்த அரவான் அவளை  நெருங்கினான். கைகோர்த்தான்; சந்தனத்தின் சுகந்தம் அவன் மனதை நிலை தடுமாறச்  செய்தது. அங்கேயே மாளிகைக்கு முன் உள்ள நந்தவனத்தில் நிலவின் சாட்சியாக  அவளை காந்தர்வ விவாகம் செய்துகொண்டு, அவளை அழைத்துக் கொண்டு மாளிகைக்கு  சென்றான். இரவு இதமான தென்றல் வீசியது. மாளிகையில் விளக்குகள் அணைந்தன அரவான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். அரவானை காந்தர்வ விவாகம் செய்து  கொண்ட

அந்த அழகி யார்? அரவானின் ஆசையை நிறைவேற்ற கண்ணன் தன் மாய சக்தியால்  ஒரு அழகிய பெண்ணை உருவாக்கி அனுப்பினார் என்றும்; கண்ணனே பெண்ணாக மாறினார் என்றும் புராணத் தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்தாலும் அரவான் முழுமையாக மகிழ்ச்சியடைந்தான். விடிந்ததும் கண்ணனிடம் கொடுத்த வாக்குறுதியை  நிறைவேற்ற நீராடி, தூய ஆடை அணிந்து களப்பலிக்குத் தயாரானான் அரவான்.  முறைப்படி அவளை களப்பலி கொடுத்தனர். பாண்டவர்களுக்கும் துரியோதனர் கூட்டத்திற்கும் போர் ஆரம்பமாயிற்று. பதினெட்டு நாட்கள் நடந்த இந்தப்  போரினைத் தான் பாரதப் போர் என்று வரலாறு சொல்கிறது. பாரதப் போருக்காக களப்பலியான அரவானின் தலை, போர் முடியும் வரை உயிருடன் இருந்தது. போரில் நடந்த நிகழ்ச்சிகளை அரவான் கண்டு மகிழ்ந்தான். போர் முடிந்து பாண்டவர் வெற்றி பெற்றதும் கண்ணன், அரவானை உயிர்ப்பித்தான் என புராணம் கூறுகிறது. இதனை நினைவூட்டும் வகையில் சித்திரை மாத பவுர்ணமி அன்று விழுப்புரம் அருகிலுள்ள கூவாகம் என்னும் கிராமத்திலிருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் அரவாணிகள் (திருநங்கையர்கள்) திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி ஒரு  வாரத்திற்கு முன்பே தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் வாழும் அரவாணிகள்  பலரும் கூத்தாண்டவர் கோயிலை நோக்கி வருவது வழக்கம். பாரதப்போரில் களப்பலியான அரவான் தான் தங்கள் கணவன் என்றும்; களப்பலிக்கு முன் அழகிய பெண்ணாக மாறிய கண்ணனின் வாரிசுகள் தான் தாங்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

http://www.yourastrology.co.in

 


உங்கள் உயிர் பிழைக்க எதை உண்போம் என்றும், உங்கள் உடல் மூட எதை உடுத்திக் கொள்வோம் என்றும் ஏக்கமாய்  இருக்கிறீர்கள். உணவை விட உயிரும், உடையை விட உடலும் மேன்மையானதல்லவா?

சிறு குழந்தைபோல் எவர் தன்னைப் பணிவாகத் தாழ்த்திக் கொள்கிறாரோ, அவரே பரலோகத்தில் தலை சிறந்தவராய் இருப்பார்.

கவலைப்படுவதன் மூலம் உங்களில் ஒருவராவது ஒரு முலமேனும் உயர்ந்து விட முடியுமா?

மெழுகுவர்த்தியை மரக்களுக்கடியில்  வைப்பது இல்லை. அனைவர்க்கும் ஒளிதரும் வண்ணம் விளக்குத் தண்டின் மேல்தான் வைப்பார்கள்.

இறைவன் நீங்கள் கேட்குமுன்பே உங்களுக்கு எவை தேவை என்பதை தந்தை ஸ்தானத்திலிருந்து அவன் அறிவான்.

-  இயேசு நாதர்

முயற்சி மேற்கொண்டால் வெற்றியை எட்டும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். லட்சியத்தை தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூடாது.

ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். யாருக்காகவும் எதற்காகவும் பயம் கொள்ளாதீர்கள். இதை பின்பற்றினால் வாழ்வில் ஒருபோதும் துன்பம் நம்மைத் தீண்டாது.

ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் கல்வி அவசியம். அப்பொழுது சமூதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் மறைந்து சமதர்ம சமுதாயம் உண்டாகும்.

பகுத்தறியும் ஆற்றல் இல்லாத யாருக்கும் கொள்கை ஒன்றும் இருக்காது. இதுவே என் கொள்கை என்று வாழ்பவனிடம் பகுத்தறியும் ஆற்றல் இருக்கும்.

தன்னம்பிக்கை மனதில் இருந்தால் வெற்றி உறுதி நம்பிக்கை இருக்குமிடத்தில் விடாமுயற்சி இருக்கும். விடாமுயற்சியே வெற்றியை கொண்டு வந்து விடும்.

எண்ணம், சொல், செயல் மூன்றிலும் நேர்மை இருக்குமானால் அக்னிக்கு நிகரான ஆற்றல் நம்மிடம் உண்டாகி விடும்.

- பாரதியார்

எல்லா உயிர்களையும் சமமாகக் கருதுங்கள். அதனால் பிறவித்தளையில் இருந்து நீங்கி விடுதலை காண்பீர்கள்.

பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம் குற்றமற்றவர்களிடம் மட்டும் தான் காணப்படும். தான் செய்த குற்றத்தை மறப்பதும், மறைப்பதும் மூடனின் செயல்.

குடும்பத்தில் ஒழுங்கில்லாவிட்டால் நாட்டிலும் ஒழுங்கு இருக்காது.

எந்த செயலுக்கும் காலம் ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதனை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. மனிதனின் எண்ணத்தை மீறியும் காலசக்தி வேலை செய்வதுண்டு.

எந்த இடத்திலும் உண்மை பேசுங்கள். பிறர் சொல்லும் உண்மைகளை விருப்பத்தோடு கேளுங்கள்.

பெண்ணுக்கு கற்பு மிகச் சிறந்த கடமை. அதைக் காக்கும் பொருட்டு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தகும்.

குழந்தைகளுக்கு  வெறும் கல்வியறிவு மட்டுமே போதாது. ஆரோக்கியமும் முக அவசியமானது.

                                                                                                         – பாரதியார்

உங்களுக்கு உன்னதமாக்கப்படும் ஓர் உறவு 

                   உங்கள் வாழ்க்கையின் இக்கட்டத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்ந்தால், அதற்க்குக் காரணம் உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருக்கிறது என்பதால் அல்ல. நீங்கள் உன்னதமானதாகக் கருதும் ஓர் உறவு செவ்வனே சென்று கொண்டிருக்கிறது என்பதால் தான்.
                   உறவுகள் விதைகளைப் போல. அவை பேணி வளர்க்கப்பட வேண்டும். எதிர்பார்ப்புகள் களைகளைப் போல. அவை தானவே வளர்கின்றன. ஓர் உறவை வளர்க்க, தேவையான முதலீடுகள் செய்யப்பட்டுவிட்டால், அந்த உறவில் எதிர்பார்க்கப்படும் களைகளைக் கட்டுபடுத்தி வைத்துக் கொள்ளலாம். ஓர் உறவு அலட்சியப்படுத்தப்படும் போது, அதிலிருக்கும் எதிர்பார்ப்புகள், அந்த உறவின் வேர்களையே ஆட்டம் காணச் செய்து விடுகின்றன. வளர்ச்சியுறாது நின்றுவிட்ட உறவுகளில் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வதுதான் நமது பிரச்சனை.
                    நாம் சேமிப்பு வங்கிக் கணக்கை இதற்க்கு உருவகமாக எடுத்துக் கொள்ளலாம். அக்கணக்கில் தொடர்ந்து பணம் போடப்படும்போது அதன் இருப்பு உயர்கிறது. நீங்கள் தேவையானபோது அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அது ஒருபோதும் அதில் போடப்பட்டவற்றைவிட  அதிகமாக இருக்க முடியாது. அதேபோலத்தான் உறவுகளிலும் நாம் அவ்வுறவில் போட்டுள்ள அளவிற்கே அதிலிருந்து எடுத்துக் கொள்ள முடியும்.
                      ஓர் உறவில் உணர்வுரீதியான இருப்பு அதிகமாக இருக்கும் போது, நாம் தவறுகள் பிறரால் பொறுத்துக் கொள்ளப்படுகின்றன. தகவல் பரிமாற்றம் போதுமானதாக இல்லாத சமயங்களில்கூடப் பொருள் புரிந்து கொள்ளப்படுகின்றது. உங்களது செயல்கள் போதுமானவையாக இல்லாத பட்சத்திலும் கூட, உங்களது நோக்கம் பாராட்டப்படுகிறது. மொத்தத்தில் அந்த உறவு நன்றாக இருக்கும். நீங்கள் நல்லவர் என்று கருதப்படுவதுதான் அதற்குக் காரணம். நீங்கள் நல்லவர் என்று கருதப்படுவதற்கான காரணம், நீங்கள் அந்த உறவில் உணர்வு இருப்புகளை வளர்க்கத் தேவையான முதலீடுகளை ஏற்கனவே இட்டு வைத்திருப்பதுதான்.
                        ஆனால் சில உறவுகளை நாம் பேணிக் காக்காமல் விட்டுவிடுகிறோம். அது நிலைத்து நிற்கும் என்று நாமாகவே அனுமானித்துக்  கொள்கிறோம்.அதை வளர்க்க எவ்வித முயற்சிகளையும் நாம் மேற்கொள்வதில்லை. எதிர்பார்ப்புகள் வளர்ந்து கொண்டே போகும்போது, அவற்றை வளர்ப்பதற்குத் தேவையான முதலீடுகள் தொடர்ந்து இடப்படுவதில்லை. உணர்வு இருப்புகள் முழுவதும் தீர்ந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு சூழலில், நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உங்களைக் குற்றவாளியாகக் காட்டும். உங்களது ஒவ்வொரு செய்கையும் எடைபோட்டுப் பார்க்கப்படும். வார்த்தை யுத்தங்களும், ஓங்கி அறையப்படும் கதவொலிகளும் அடிகடி நிகழும். உங்களது செய்கைகள் போற்றப்படாது. உங்களது கொக்கங்கள் மதிக்கப்படாது. அத்தகைய ஓர் உறவு, கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள பூமியின் மீது நடப்பது போன்றது. அவை எந்நேரமும் வெடிக்கலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் வெடிக்கலாம்.
                          இதன் தீர்வு, நினைப்பதைக் காட்டிலும் எளிது. முதலீடுகளைப் போட வேண்டும். மேலும் மேலும் முதலீடுகளைப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் அனைத்துவிதமான உறவுகளிலும் முதலீடுகளைத் திரும்பப்பெறுதல் தவிர்க்க இயலாதது. ஆனால் போதுமான முதலீடுகளை எப்பொழுது வேண்டுமானாலும் நம்மால் அவற்றில் போட்டுக் கொள்ள முடியும். நீங்கள் உங்கள் நேரத்தை எதில் முதலீடு செய்கிறீர்களோ அது வளரும். தரமான நேரத்தை முதலீடு செய்வதன் மூலம் உறவுகள் பேணி வளர்க்கப்பட வேண்டும். அடுத்தவரைப் புரிந்து கொள்ளவும், காது கொடுத்துக் கொள்ளப்படுவதற்காக, எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிக்கடிப் பேசுங்கள். கொடுக்கத் தயாராக இருங்கள். அதே சமயம், கண்ணியத்துடன் பெற்றுக் கொள்ளவும் தயாராக இருங்கள். பெறுதல் என்பது கொடுப்பவரை மதிக்கும் செயலின் வெளிப்பாடு. அதுவும் ஒரு பெரிய முதலீடுதான். முதலீட்டிற்கு மேல் முதலீடாக, ஒரு சிறந்த உறவை வளர்த்தெடுங்கள். அதன் மூலம் வாழ்வில் மகிழ்ச்சியை அறுவடை செய்யுங்கள்.
                            கடவுள்களுக்குக்கூட உறவுச் சிக்கல்கள் இருந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. கடவுளை நெருங்க இது ஓர் அருமையான வாய்ப்பு.
                                                                                                                                                                                                      - ரங்கராஜன்

சிகரத்தை அடைவதற்குச் சுலபமான வழி கிடையாது.

வாகனம் ஓட்டுவது என்று தேர்ந்தெடுத்துவிட்டால், போக்குவரத்து நெரிசலை ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆரோக்கியம் குறித்து அக்கறை கொண்டிருந்தாள், நாக்கு கேட்டதை எல்லாம் அதற்குக் கொடுக்க முடியாது. வருமானம் என்றால் வருமான வரியும் உடன் வரும்.

வாழ்க்கையில்  நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், அதோடு ஒட்டிப் பிறந்த நன்மைகளோடு தீமைகலோடும்தான் அது வரும். முட்களற்ற ரோஜாவைத் தேடுவது எவ்வளவு மடத்தனம்! நாணயத்தின் ஒரு பக்கத்தை நீங்கள் தேர்தெடுத்தால், அதன் மறுபக்கத்தையும் சேர்த்துத்தான் நீங்கள் தேர்தெடுக்கீறிர்கள். பிரச்சனைகளற்ற, ஆசிவதிக்கப்பட்ட  ஒரு வாழ்க்கை வேண்டும் என்று கேட்காதீர்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை மகாத்மக்களால் கூட நடத்த முடியாது. அப்படிப்பட்ட வாழ்க்கை எதுவும் கிடையாது.

கனவுகள் பெரிதாகும் போது பிரச்சனைகளும் பெரிதாகும். நீங்கள் நடக்க விரும்பும் போது ஒரு சில பிரச்சைகள் மட்டுமே இருக்கும். ஒரு பெரிய ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள நீங்கள் விரும்பினால், அதிகமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது வெளிப்படை. வெறுமனே வாழ்க்கையை ஓட்டினால் மட்டும் போதும் என்று நீங்கள் நினைத்தால், பிரச்சனைகள் குறைவுதான். ஆனால் உங்களது முழுத்திறமையும் வெளிப்படும் விதத்தில் வாழ நினைத்தால், நீங்கள் பெரிய பெரிய பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஒரு குச்சியின் ஒரு முனையைப் பிடித்து நீங்கள் தூக்கும்போது, மறுமுனையை நீங்கள் ஏற்கனவே தூக்கிவிட்டீர்கள். செதுக்கப்பட நீங்கள் தயாராக இருந்தால்தான், துதிக்கப்படும் ஒரு சிலையின் நிலையை அடையும் தகுதியை உங்களால் பெற முடியும். சிகரத்தை அடைவதற்கு சுலபமான வழி ஏதும் கிடையாது. சிகரத்தை அடைந்தவர்கள் அதைச் சுலபமாகச் சென்றடையவில்லை.

என்ன இருந்தாலும், வரலாற்றைப் படிப்பவனுக்கும் வரலாற்றைப்  படைப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும்?

பைபிள் வாசிப்புக் குழு ஒன்றில் இப்படி ஒரு வாசகத்தைப் படித்தனர்: ” வெள்ளியைச் சுத்தப்படுத்தும், மாசு அகற்றும் நபர்போல அவர் உட்கார்ந்திருப்பார்.” கடவுளின் குணம் மற்றும் இயல்பு குறித்து இங்கு கூற முற்படுவது என்ன? அந்த வாரம், அக்குழுவில் இருந்த ஒரு பெண்மணி, வெள்ளி உலோகக் கொல்லன் ஒருவன் வேலை செய்வதைப் பார்க்கச் சென்றாள். அவன் வேலை செய்வதை அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போது, கொல்லன் ஒரு துண்டு வெள்ளியை எடுத்துத் தீயில் வைத்து அது சூடாவதற்காகக் காத்திருந்தான். வெள்ளியைத் தீயின் நடிவில் வாழ்க்கை வேண்டும். ஏனெனில், அங்குதான் சூடு அதிகமாக இருக்கும். அது அனைத்து மாசுகளையும் எரித்து விடும் என்று கொல்லன் எடுத்துரைத்தான். முழுநேரமும் உலையின் முன்னாலேயே உட்கார்ந்து இருக்க வேண்டும் என்று கூறப்படுவது உண்மையா என்று அவள் கேட்டாள். அதை உறுதி செய்த கொல்லன், முழுநேரமும் அங்கு உக்கார்ந்திருக்க வேண்டும். என்பது மட்டுமல்லாமல், தெரிவித்தான். அதிகப்படியாக ஒரு கணம் வெள்ளியை நெருப்பில் விட்டுவிட்டால், அது உருகி ஓடிவிடும். உடனே மாசுகள் அகற்றப்பட்டுவிட்டது என்பது உனக்கு எப்படித் தெரியும்? ” அவன் அதற்குப் புன்னகைத்துக் கொண்டே இவ்வாறு பதிலளித்தான்: ” ஓ! அது சுலபம்……. என் உருவத்தை நான் அதில் பார்க்கும்போது!”

வாழ்க்கைப் பிரச்சனைகள் உங்களை அதிகமாகத் தாக்குவதாக நீங்கள் உணர்ந்தால், கடவுள் உங்கள் மீது தான் வைத்துக் கண்ணை எடுக்கவில்லை என்பதையும், அவரது பிம்பம் உங்களிடம் தெரியும்வரை அவர் தனது கண்களை அகற்ற மாட்டார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனின் உள்ளும் ஒரு தீர்க்கதரிசி உறங்கிக் கொண்டிருக்கிறான். கடவுள் மனிதனாக ஆக வேண்டும் என்பதற்காகத்தான். வாழ்க்கை என்பது உங்களை எரித்துக் கொண்டிருக்கும் ஓர் உலை அல்ல. ஜொலிக்கும் வெள்ளியாக உங்களை மாற்றிக் கொண்டிருக்கும் ஓர் உலை.

கடவுள் உங்களுக்கு அளித்துள்ள கொடைதான் ‘இன்றைய தினம்’

கொடுக்கப்படும் பொருளின் பின்னால் உள்ள இதயத்தை அடையாளம் கண்டுகொள்ளும் போதுதான் அப்பொருள் ஒரு பரிசகிறது. ஒரு பரிசின் பின்னால் உள்ள இதயத்தை தவறிவிடும் போது, அப்பரிசு ஒரு சாதாரண பொருளாகிறது.

உங்களுக்குப் பேனாவைக் கொடுத்த இதயத்தை அடையாளம் கண்டுகொள்ளும் போது அது பரிசகிறது. உங்கள் வளச்சியில் இதயபூர்வமாகச் செயல்பட்ட உங்களது பெற்றோர்களின் இதயங்களை நீங்கள் அடையாளம் கண்கொள்ளும் போது நீங்கள், ‘என் குழந்தை பருவம் எனக்குக் கிடைத்த வெகுமதி’ என்று கூறுகீறிர்கள். அறிவை உங்களுக்கு பரிமாற்றம் செய்த ஆசிரியரின் இதயத்தை நீங்கள் கண்டுகொள்ளும் போது, கல்வி ஒரு பரிசகிறது. உங்களது வளச்சியில் அக்கறை கொண்டுள்ள முதலாளியின் இதயத்தை நீங்கள் புரிந்து கொள்ளும் போது, உங்கள் வாழ்க்கைநிலை ஒரு வெகுமதியாக மாறிவிடுகிறது. உங்களது நிறுவனத்தில் ஈடுபட்டுடன் வேலை செய்யும் ஊழியர்களின் இதயத்தை கண்டுகொள்ளும் போது அது ஒரு பரிசகிறது.

பரிசு என்பது ஒரு பொருளல்ல. அது ஒரு கண்ணோட்டம். வளங்கபட்டப் பொருளின் பின்னால் உள்ள இதயத்தை தரிசிக்கத் துடிக்கும் பார்வை.
அந்த நோக்கில் பார்த்தால் ‘இன்றைய தினம்’ ஒரு அழியாத பரிசு. ஒவ்வொரு பரிசுக்கு பின்னால் பலர் இருந்தாலும், ‘இன்றைய தினம்’ என்ற விலைமதிப்பற்றப் பரிசை நீங்கள் கடவுளிடம் இருந்து மட்டுமே பெற முடியும். அப்படி இல்லாவிட்டால், நீங்கள் ஏற்கனவே உங்களது கடைசி தினத்தை வாழ்ந்து விட்டீர்கள் என்று பொருள். நேற்றைய இரவு படுக்கச்சென்ற அனைவரும் இன்று காலை கண்விழித்து எழவில்லை. நீங்கள் அப்படிக் கண் விளித்திருக்கீறீர்கள் என்றால், நம்மை மீறிய எதோ ஒரு சக்தி மற்றுமொரு ‘இன்றைய தினத்தை’ வாழ நீங்கள் தகுதியானவர்கள் தான் என்று நினைத்திருக்கிறது. இந்த 24 மணிநேர சமாசாரத்தின் பின்னால் உள்ள தெய்வீகப் பரிசு. அப்படிப்பட்ட ஒரு பரிசைத் தவறாகப் பயன்படுத்துவது, பரிசளித்தவரைப் பழிப்பதற்குச் தந்தவரை நிந்திப்பதாகும். வேகுமதியின் மதிப்பை நீங்கள் புரிந்திருந்தால் மட்டுமே உங்களால் வெகுமதியைப் பாராட்ட முடியும். இன்றைய தினத்தை மதியுங்கள். அதை மதிப்புடையதாக ஆக்குங்கள்.

இன்று, உங்கள் வாழ்க்கையின் ஒரு நாளை அதற்குப் பதிலாகக் கிடைக்கும் எதோ ஒன்றிற்காகச் செலவிடப் போகிறீர்கள். அதனால் உங்களது இன்றைய தினத்தை உங்களால் முடிந்த அளவு பயனுள்ளதாக ஆக்குங்கள். உங்கள் மீதமுள்ள வாழ் நாட்களின் தொடக்க தினம்தான் இன்றைய தினம். அதனால், கடந்தகாலத்தை உங்களிடமிருந்து பிரித்தெடுக்கும் விதத்தில் ஒரு கோடு வரையுங்கள். நேற்றைய தினம் நேற்றே முடிந்துவிட்டது என்று நம்புங்கள். வருங்காலத்திற்கு விரையும் பொத்தானை அழுத்துங்கள். கடந்தகாலத்தின் வடுக்கைப் பற்றி இன்றைய தினத்திற்குக் கவலை கிடையாது. வருங்கலத்தின் உரிதிய்ற நிலையம் அதைப் பாதிப்பதில்லை. இன்றைய தினம் ஒரு தினம். ஒரு சந்தர்ப்பம். வாழ்வின் ஒரு அங்கம். அதனால் இன்றைய தினங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

புத்தர் இவ்வாறு கூறியுள்ளார். “இன்று நாம் விழித்தெழுந்து நன்றி செலுத்தலாம். அன்று நம்மால் நிறையக் கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், குறைவாகக் கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் உடல் நிலைக் குறைவு ஏற்பட்டாலும் இறந்து போகாமல் இருந்ததற்காக நாம் அனைவரும் நன்றி செலுத்துவோமாக!”

அதனால் இப்படிப் பிரார்த்தியுங்கள்: ‘கடவுளே, என்னுடைய இன்றைய தினம் நீவிர் எனகளித்துள்ள கோடை. நான் அதை வாழும் விதம் நான் உமகளிக்கும் பரிசாக இருக்கட்டும்.”

ஹரிக்கு துளசி, ஹரனுக்க வில்வம் ஏன்?

  நட்சத்திரங்களில் திருவோணம் விஷ்ணுவுக்கும், திருவாதிரை சிவபெருமானுக்கும் உரியது வானில் ஆராய்ச்சியாளர்கள் திருவாதிரை எரி நட்சத்திரம் என்றும் திருவோணம் குளிர்ச்சியான நட்சத்திரம் என்றும் நிரூபித்து இருக்கின்றனர். ஜோதிப் பிழம்பான சிவனுக்குக் குளிர்ச்சிப் பொருந்திய, வில்வமும், அதிக குளிர்ச்சியில் இருக்கும் மகா விஷ்ணுவுக்கு வெப்பத்தøத் தரும் துளசியும் பூஜைப் பொருட்களாக இருப்பது சாலப் பொருத்தமே

வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவியில் பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா?

  முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.

10 அறிவுரைகள்

  1. எவர் மீதும் கோபம் கொள்ளாதே
  2. எந்தக் கவலைக்கும் இடமளிக்காதே
  3. சுக போகங்களில் மூழ்கி விடாதே
  4. பிறரிடம் பொறாமை கொள்ளாதே
  5. சோம்பலை நுழைய விடாதே
  6. சுறுசுறுப்போடு உழைத்துக் கொண்டிரு
  7. பிறர் பொருளைப் பறிக்க நினைக்காதே
  8. எவரையும் ஏளனமாகப் பேசாதே
  9. பேராசை, பெருவிருப்பம் கொள்ளாதே.
  10. யாரையும் வெறுத்து ஒதுக்காதே.

9 கட்டுப்பாடுகள்

  1. உணவைக் குறை; நாக்கைக்கட்டுப்படுத்து.
  2. சவாரியைக் குறை; அதிகமாக நட.
  3. கவலையைக் குறை; சிரித்துப் பழகு.
  4. சோம்பலைக் குறை; நன்றாக வேலை செய்.
  5. பேச்சைக் குறை; அதிகமாய் சிந்தி.
  6. செலவைக் குறை; அதிகமாய் தானம் செய்.
  7. திட்டுவதைக் குறை; அதிகமாய் அன்பு காட்டு.
  8. உபதேசத்தைக் குறை; செயலை அதிகரி.
  9. கெட்ட பழக்கத்தை விடு; நல்லதை கடைபிடி

1) செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

2) அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும்.

3) முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை.

4) பாவம் என்ற ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.

5) சுதந்திரமானவனாக இரு.

6) எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே.

7) உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய்.

8 ) வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்தவையாகத்தான் இருக்கும்.

9) நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! கடவுளிடத்தில் நம்பிக்கை! இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும்.

10) நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.

11) இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

12) அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். சரியான வழியில் செல்கின்ற மனம் என்றென்றைக்கும் காத்து ரட்சிக்கும்.

-சுவாமி விவேகானந்தர்.

 

 

வியக்க வைக்கும் ஒன்பது வகை வெளிப்பாடுகள்

நம்மில் ஒவ்வொருவரும் ஒருசில சந்தர்ப்பங்களில் ஆழ்மனதின் அற்புத சக்தியை நம் வாழ்க்கையிலேயே கண்டிருப்போம். நாம் ஒருவரைப் பற்றி எண்ணி சிறிது நேரத்தில் அவர் நேரில் வருவதைக் கண்டிருக்கலாம். அல்லது அவரிடமிருந்து போன் கால் வந்திருக்கலாம். ஒருவரிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவரே அந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கலாம். போன் மணி அடித்தவுடன் இவராகத் தான் இருக்கும் என்று நினைத்து ரிசீவரை எடுத்தால் பேசுவது நினைத்த அதே நபராக இருந்திருக்கலாம். ஆனால் இந்த விஷயங்கள் மிகச் சாதாரணமானவையாக இருப்பதாலும், நம்மை ஆழ்மன சக்தியாளராக நினைக்காததாலும் அவற்றை நாம் பெரிதாக நினைப்பதில்லை.

அதுவே மிகவும் அசாதாரணமான நிகழ்ச்சியாக இருந்தால் மட்டுமே அந்த சக்தியின் தன்மை நம்மால் உணர முடிகிறது.உதாரணத்திற்கு வின்ஸ்டன் சர்ச்சில் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலாம். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஒரு நாள் தன் காரை நோக்கிச் செல்ல, டிரைவர் வழக்கமாக அவர் அமரும் இடத்தின் கார்க்கதவை திறந்து நின்றார். வின்ஸ்டன் சர்ச்சில் அந்த இடத்தில் அமர முற்படாமல் சுற்றிச் சென்று மறுபக்கக் கதவைத் திறந்து அந்தப்பக்கமே உட்கார்ந்து கொண்டார். சிறிது தூரம் சென்ற பின் அந்தக் காரில் வெடிகுண்டு வெடித்தது. அவர் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தால் அவர் அந்த விபத்தில் கொல்லப்பட்டிருப்பார். இடம் மாறி அமர்ந்ததால் அவர் உயிர் பிழைத்தார். பின் அதைப் பற்றிச் சொல்லும் போது ஏதோ ஒரு உள்ளுணர்வு வழக்கமான இடத்தில் என்னை உட்கார விடாமல் தடுத்ததுஎன்று சர்ச்சில் சொன்னார்.

yourastrology_Aanmeegam

அது உயிரைக் காப்பாற்றிய சம்பவமானதால் அது இன்றும் பேசப்படுகிறது. அதுவே உப்பு சப்பில்லாத ஒரு நிகழ்வைப் பற்றியதாக இருந்தால் யாரும் அதை நினைவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் உண்மையில் ஒருவரைப் பற்றி நினைத்த சிறிது நேரத்தில் அவர் நம் எதிரில் வந்து நிற்பதும், சர்ச்சிலின் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவமும் ஆழ்மன சக்தியின் சில வெளிப்பாடுகள் தான்.

ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பலதரப்பட்டவை. அவை :–

1. Psychokinesis எனப்படும் வெளிப் பொருள்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு. பொருட்களைப் பார்வையாலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை இந்த வகையில் அடங்கும். நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்கு இந்த சக்தி இருந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

2. Extra Sensory Perception (ESP) எனப்படும், நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறிய முடிவது. உதாரணத்திற்கு ஜெனர் கார்டுகளை வைத்து ஜோசப் பேங்க்ஸ் ரைன் செய்த ஆராய்ச்சிகளைச் சொல்லலாம். ஒருவர் எடுத்த கார்டு எது என்பதைப் பார்க்கலாமலேயே சொல்ல முடிந்ததை நாம் முன்பு பார்த்தோம்.
3. Telepathy எனப்படும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்திகளை அனுப்புவது. இது ஆழ்மன ஆராய்ச்சிகளில் ESP வகையிலேயே சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே அதிகம் காணலாம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மால் காண முடியும். வளர்த்தும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி இருக்கும்.
4. Clairvoyance or Remote Viewing எனப்படும் வெகு தொலைவில் உள்ளதையும் காண முடியும் சக்தி. ஆப்பிரிக்கக் காடுகளில் அமெரிக்க விமானம் விழுந்து கிடந்த இடத்தை அட்சரேகை தீர்க்கரேகையோடு ஒரு பெண்மணி சொன்னதை ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தது நினைவிருக்கலாம். ஆவிகளுடன் பேச முடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்த வகையிலேயே சேர்க்கிறார்கள்.
5. Psychometry என்பது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடிவது. இதற்கு உதாரணமாக பீட்டர் ஹுர்கோஸ் என்ற டச்சுக் காரரைச் சொல்லலாம். இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்ததில் இந்த சக்தியை யதேச்சையாகப் பெற்றார். இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும் தடயப் பொருள்களைப் பிடித்துக் கொண்டு குற்றவாளிகளை விவரிப்பதில் வல்லவராக இருந்தார். ஒரு வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் இருந்த சட்டையைப் பிடித்துக் கொண்டே கொன்றவனின் அங்க அடையாளங்களைச் சொன்னார். மீசை, மரக்கால் உட்பட சரியாகச் சொல்ல முன்பே சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருந்த சிலரில் ஒருவன் அது போல இருக்கவே அவனைப் பற்றி போலீசார் சொல்ல அவன் கொலை செய்த ஆயுதத்தை ஒளித்து வைத்த இடத்தையும் பீட்டர் கூறினார்.
6. Precognition என்னும் நடப்பதை முன் கூட்டியே அறியும் சக்தி.உதாரணத்திற்கு இத்தோடரின் ஆரம்பத்தில் கிறிஸ்டல் பந்து ஞானி டிலூயிஸ் எப்படி பல விபத்துகளை நடப்பதற்கு முன் கூட்டியே சொன்னார் என்பதைப் பார்த்தோம்.
7. Post cognition என்னும் என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தி. உதாரணமாக மேலே குறிப்பிட்ட பீட்டர் ஹூர்கோஸையே இதற்கும் கூறலாம். இன்றும் சில வெளிநாடுகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இந்த சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

8. Astral Projection or Out of Body Experience (OBE) உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தி. இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த சக்தி ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆராயப்பட்டிருக்கிறது. இது குறித்து டாக்டர் சார்லஸ் டார்ட் ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதி வைக்கப்பட்டிருந்த ஐந்து இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.
9. Psychic Healing or Spiritual Healing எனப்படும் மருந்துக்களின் உதவியில்லாமல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி. இதற்கு உதாரணமாக டாக்டர் ஓல்கா வோராலைப் பார்த்தோம். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்ப்பதில்லை. இது தெய்வீக சக்தி அல்லது ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். ஆனாலும் இது ஆழ்மன சக்தியிலேயே சேர்ப்பது பொருத்தம் என்று நான் நினைக்கிறேன்.

   ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த ஒன்பது வகைகளில் அடக்கி விட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை என்று சொல்லலாம்.

 

நன்றி :

http://enganeshan.blogspot.in

மன நோய் சரியாக:

வெண்தாமரையைக் கொண்டு வந்து கஷாயம் வைத்து
சாப்பிட்டு வந்தால் (ஒரு மண்டலம் 48 நாட்கள் குடிக்க
வேண்டும் ) இருதய நோய்கள் குணமாகும் .
அத்தோடு  மாநோயும்  குணமாகிறது .

 

 

ஜபம் செய்யும் முறை:

பிறர் காதில் விழும்படி ஜெபம் செய்வது  வாசிகம் .
தனது காதில் விழும்படி செய்வது உபாம்சு .மனதில் மட்டும்
சொல்வது மானசம் .வாசிகம் ஒரு மடங்கு பயனளிக்கும் .
மானசம் ஆயிரம் மடங்கு பயனளிக்கும் .

 


சிறுநீர்  கோளாறுக்கு:

சிறுநீர்  சம்பந்தமான கோளாறு  உள்ளவர்கள்  கீழாநெல்லி
இலையை ஒரு கைபிடியளவு  எடுத்து இடித்து
சாறு பிழிந்து  கர்கண்டுத் தூள்  சேர்த்து
சாப்பிட்டு வந்தால் ,சரியாகும் .

 

 

தாய்க் குலத்திற்கு :

அக்னியை  வாயால் ஊதி எழுப்பவோ ,அணைக்கவோ கூடாது .
உரல் ,அம்மி ,உலக்கை ,வாயிற்படி ,முறம் இவைகளில் உட்காரக்கூடாது .
இரவில் மிஞ்சிய உணவை மண் பாத்திரங்களில் வைத்திருக்கக்கூடாது .
அன்னம் ,உப்பு ,நெய் இவைகளை கையால் பரிமாற கூடாது .
உப்பும் ,நெய்யும்  எச்சில் செய்தபின் பரிமாறக்கூடாது.

 

 

குழந்தையின் மலசிக்கலுக்கு :

    உலர்ந்த  திராட்சைப் பழங்களை தண்ணீரில்
ஊரப்போட்டச் சிறிது நேரம் கழித்து ,அப்பழத்தைக்
கசக்கிப் பிழியுங்கள் .அதை வடிகட்டி எடுத்துக்
குழந்தைக்குக் கொடுங்கள் .இதனால் மலச்சிக்கல்
குணமாகும் .குழந்தையின் கணைச்சூடும்  மாறும்
விபரங்கள்
தகவல்கள்
300x250banner.jpg

Error. Page cannot be displayed. Please contact your service provider for more details. (5)