ஒருமுறை, விவேகானந்தர் இமயமலையில் நீண்ட மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தார். வழியி
ல் ஓர் இளைஞர் மலைஸ் சரிவு ஒன்றில் ஏற இயலாமல் களைத்துப்போய் அமர்ந்துவிட்டதைக் கண்டார். அந்த இளைஞன், விவேகானந்தரிடம், ” நான் மிகவும் சோர்ந்து விட்டேன், இந்தப் பாதையை எப்படிக் கடப்பேன்? இனிமேல் நடக்க என்னால் இயலாது. என் நெஞ்சே வெடித்து விடும்.” என்றான். விவேகானந்தர் அவனிடம், “இளைஞனே சற்று கீழே பார்.. காலுக்குக் கீழே நீண்டு தெரிகின்ற அந்தப்பாதை முழுவதும் ந்டந்தால் போதும், முன்னால் தெரிகின்ற பாதையும் விரைவில் உன் காலுக்குக் கீழே வந்து விடும்.” என்றார். தெம்பூட்டுகின்ற இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அந்த இளைஞனுக்கு உற்சாகம் பிறந்தது. எழுந்து நடக்க ஆரம்பித்தான்.
