மகா பக்திமானான பண்டிதர் ஒருவர் உச்சிவெயில் நேரத்தில் காட்டு வழியே சென்று கொண்டு இருந்தார். கலைப்பும் தாகமும் அவரை வாட்டின. நா வறண்டது. சுற்றும் முற்றும் பார்த்தார். வேடன், ஒருவன்,ஒரு தோல் பையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான். பக்தர் ஆசாரசீலர். இருந்த போதிலும் வேறு வழியில்லாமல், அந்த மனிதனை அழைத்து சிறிது தண்ணீர் கொடுக்கும்படி கேட்டார். அப்போதும் சந்தேகத்தோடு, பக்தர் அவனைப் பார்த்து, ” தோல்பை உள்ளே சுத்தம் தானே” என்று கேட்டார். “ஸ்வாமி, என் தோல்பை சுத்தமானது தான். ஆனால் உங்கள் தோல் (உடல்) பையில்தான் நிறைய அசுத்தம் இருக்கிறது” ர்ன்று கூறினான் அவன். பண்டிதர் வெட்கமடைந்தார். புறத்தூய்மையை விட அகத்தூய்மைதான் முக்கியம்.

Leave a Reply

விபரங்கள்
தகவல்கள்
300x250banner.jpg