| இறைவன் | பார்த்தசாரதி |
| இறைவி | ருக்மிணி |
| தல மரம் | மகிழம் |
| தீர்த்தம் | கைரவிணி புஷ்கரிணி |
| புராண பெயர் | பிருந்தாரண்ய க்ஷேத்ரம் |
| கிராமம்/நகரம் | திருவல்லிக்கேணி |
| மாவட்டம் | சென்னை |
| மாநிலம் | தமிழ்நாடு |

திருவிழா : ஸ்ரீ பார்த்தசாரதி லட்சார்ச்சனை – பிப்ரவரி – 10 நாட்கள் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவின் போது கோயிலில் கூடுவர் பிரம்மோற்ஸவம்- ஏப்ரல் – 10 நாட்கள் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் வைகுண்ட ஏகாதேசி மற்றும் புது வருடப் பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிக்கிறார்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்
பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், ஸ்ரீ ராமானுஜர்
இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவி தனக்கு இறைவன் தன்துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம் வன்துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என்துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக் கேணி கண்டேனே.
-திருமங்கையழ்வார்
முகவரி : நிர்வாக அதிகாரி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை-600 005
