துறவி ஒருவர் தம் சீடர்களோடு காட்டுவழியே சென்று கொண்டிருந்தார். பசியுடனும் தாகத்துடனும் அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். இரவுப் பொழுது வந்தது. ஏதும் உணவு கிடைக்காததால், பசியோடு ஒரு மரத்தின் அடியில் படுத்து உறங்க ஆரம்பித்தார்கள். படுப்பதற்கு முன் துறவி “இறைவேனே! இன்று நீ எங்களுக்குக் கொடுத்த எல்லாவற்றுக்கும் நன்றி!” என்று பிரார்த்தனை செய்தார். இதைக் கேட்டு சீடர்கள் கோபம் கொண்டனர். “கடவுள் இன்று நமக்கு எதுவுமே தரவில்லை. பசியாலும் தாகத்தாலும் நம்மை வாட வைத்துள்ளார் . நமக்குத் துன்பத்தைத் தந்த அவருக்கு ஏன் நன்றி சொன்னீர்கள்.?” என்று ஒரு சீடன் கோபமாகக் கேட்டான்,. துறவி சிரித்தபடி “கடவுள் இன்று நமக்கு எதுவுமே தரவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? தன் குழந்தைக்கு என்ன தர வேண்டும். என்ன தரக் கூடாது என்பதைத் தாய் அறிவாள். அதுபோல் கடவுளும் நமக்கு என்ன தரவேண்டும் என்று அறிந்து இருக்கிறார். இன்று நமக்குப் பசியையும் தாகத்தையும் அவர் தரவில்லையா? அவர் எது செய்தாலும் நம் நம்மைக்குத்தான் செய்வார். அதனால்தான் நன்றி சொன்னேன்” என்றார்.

Leave a Reply

விபரங்கள்
தகவல்கள்
300x250banner.jpg