
அதிகாலையில் எழுந்தவுடன் இறைவனது திருவுருவப் படங்களைப் பார்த்து ஆண்டு முழுவதும் நற்பலங்களைத் தரும். மேலும் வலம்புரிச்சங்கு வைத்திருப்பவர்கள் அதில் காசுகளைப் பரப்பி வைத்து அதன் குமத்தில் விழிக்கலாம்.
கண்ணாடி தண்ணீர், ஆலய கோபுரம் போன்றவற்றையும் எழுந்தவுடன் பார்ப்பதுனல்லது. பூஜை அறையில் கனிகளை பரப்பி வைத்து அவற்றின் முகத்தில் விழித்தாலும் கனிவான வாழ்க்கை அமையும்.
எல்லாவற்றுக்கும் மேலாக நமது உள்ளங்கையை நாம் சேர்த்து வைத்து பார்ப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். விரல் நுனியில் லட்சுமியும் நடுப்பகுதியில் சரஸ்வதியும் கரங்களின் அடிபகுதியில் வீரம் தரும் துர்க்கையும் குடி கொண்டிருப்பதாக சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.
எனவே கல்வி, செல்வம், வீரம் மூன்றுக்கும் அதி தேவதைகள் வீற்றிருக்கும் உள்ளங்கையை தரிசித்தால் அன்று முழுவதும் நல்ல சம்பங்கள் நடைபெறும்.
