சீதையை மீட்டபின், பதினான்கு ஆண்டுகளும் கழிந்து விட்டதால், மீண்டும், அயோத்திக்குத் திரும்பினார். ராமர். அவர்ரோடு, வந்த அனைவரையும் அயோத்தி மக்கள் வரவேற்றனர்.
கோசலை, கைகேயி, சுமித்திரை மூவரும் அரண்மனைக்கு வந்தவர்களை பாசத்தோடு வரவேற்றனர். ராமசந்திரனோடு வந்தவர்களில் எவரும் கைகேயியை கண்டுகொள்ளவேயில்லை. இவளால் தானே ராமர் காட்டிற்குச் சென்று மிகவும் கஷ்டப்பட்டார் என எண்ணினார்.
ஆனால், அனுமன், அரண்மனைக்குள் நுழைந்ததுமே, “அனை கைகேயி எங்கே இருக்கிறார்.?” எனக்கேட்டு தேடிபோய் அவள் காலில் விழுந்து வணங்கினான்.
எல்லோரும் வியப்போடு பார்க்க, சொல்லின் செல்வன் சொன்னான், அன்னையே தாங்கள் மட்டும் ராமபிரானை வனவாசம் அனுப்பியிருக்காவிட்டால் எங்களுக்கு அவர் தரிசனம் கிடைக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். அந்த பாக்கியத்தைத் தந்த உங்களையல்லவா முதலில் வணங்க வேண்டும்!”
