கோவில்கள் விபரங்கள்

இறைவன் அர்த்தநாரீஸ்வரர்
இறைவி முத்தாம்பிகை.
தல மரம் புன்னை
தீர்த்தம் அகஸ்த்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஞான போத புஷ்கரிணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சங்கர தீர்த்தம்
கிராமம்/நகரம் ரிஷிவந்தியம்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
வரலாறு
                       சிவபார்வதி திருமணம் கைலாயத்தில் நடந்த போது, தென்திசை உயர்ந்து வட திசை தாழ்ந்தது. இதை சமன் செய்ய அகத்தியரை தென்திசை செல்ல சிவன் உத்தரவிட்டார். சிவனின் கட்டளையை ஏற்ற அகத்தியர், பல தலங்களில் தங்கி சிவபூஜை செய்து சென்றார். ஓரிடத்தில் சிவன் அகத்தியருக்கு திருமணக்காட்சி தந்தார். இந்தக்காட்சி எந்நாளும் உலக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என அகத்தியர் வேண்ட, “எனக்கு (லிங்கத்திற்கு) தேனபிஷேகம் செய்யும் காலத்தில் இங்குள்ள லிங்கத்தில் பார்வதியும் இணைந்து தோன்றுவாள்,” எனக் கூறி மறைந்தார். பல ரிஷிகள் இங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டதால் இத்தலம் ரிஷிவந்தியம்’ என வழங்கப்பட்டது.

திருவிழா

                     ஆனியில் பிரம்மோற்சவம் 10 நாள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மூன்றாவது திங்கள் கிழமையில் சுவாமிக்கு 108 சங்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
சிறப்பு
                              தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அம்மனை வழிபடாமல் சென்று விடுவான். தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த பார்வதி ஒருமுறை அபிஷேககுடங்களை மறைத்து வைத்து விட்டாள். பால் குடங்களை காணவில்லையே என வருந்திய இந்திரன், அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித்தான். அப்போது ஈசன் தோன்றி, இனிமேல் பார்வதிக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படியாக பணித்தார். அத்துடன் தினமும் நடக்கும் தேனபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாக கூறி மறைந்தார். தேன் தானும் கெடாது. தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது. இதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேனபிஷேக பூஜையில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக (ஆண்பாதி பெண்பாதியான) ஒளி வடிவில் காட்சி தருகிறார். மற்ற அபிஷேகம் நடக்கும் போது லிங்க வடிவம் மட்டுமே தெரியும்.
திறக்கும் நேரம்
                          காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்
                           நிறம் மாறும் லிங்கம், நாகத்தை உடலில் தாங்கிய லிங்கம், சாய்ந்த நிலையிலுள்ள லிங்கம், உடலில் காயம் பட்ட லிங்கம் என்றெல்லாம் பல லிங்கங்களை தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், ஒரு லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்யும் போது, லிங்கத்தில் இடை நெளிந்த, கையில் கிளியுடன் இருக்கும் அம்மன் காட்சி தரும் அதிசயத்தைக் ரிஷிவந்தியம் முத்தாம்பிகா சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் காண முடியும்.

பிரார்த்தனை

                                 பேச்சில் குறைபாடு உள்ளவர்கள், தேன் வாங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்து அந்த தேனை சாப்பிட்டால் பேச்சு குறைபாடு நீங்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்
                        தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல சிறப்பு
                         விஜய நகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக வீர வன்னியர் பரம்பரையினர் காடு வெட்டும் போது மண்வெட்டியில் வெட்டுப்பட்ட சுயம்பு லிங்கம்’ தான் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர். இன்றும் கூட வெட்டுப்பட்ட கீறலை சுயம்புலிங்கத்தில் பார்க்கலாம்.  இந்த கோயில் துவாபராயுகத்தில் தோன்றியதென்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இத்தலத்திற்கு வந்து வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக்கோலத்தையும், பூஜைசெய்த ரிஷிகளுக்கு நற்பலன்களையும், குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வந்து ஈசனை வழிபட்டுள்ளனர்.

குக நமச்சிவாயர்: குரு நமச்சிவாயரின் சீடரான குக நமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்களை தரிசித்து விட்டு இத்தலம் வழியாக சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்மனிடம் சென்று, “தாயிருக்க பிள்ளை சோறு” என்ற செய்யுளை பாடினார்.

உடனே அம்மன் அவர் முன் தோன்றி “நான் இங்கு ஈசனுடன் அர்த்தபாகம் பெற்றிருக்கிறேன். எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக” என்று கூற குக நமசிவாயரும் அதன்படியே “மின்னும்படிவந்த சோறு கொண்டு வா” என்ற பாடலைப்பாடினார். இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குகநமச்சிவாயரின் பசியாற்றினாள் என்பர். இக்கோயிலுக்கு தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கிறது. சிவாலய திருப்பணிகளில் கலந்து கொள்பவர்கள் 27 அஸ்வமேத யாகம் செய்த பலனைத்தரும் என்பது ஐதீகம்.

முகவரி 
             அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோயில் ரிஷிவந்தியம் – 606 201, விழுப்புரம் மாவட்டம்.

இறைவன் காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர்
தல மரம் மாமரம்
கிராமம்/நகரம் மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு
வரலாறு
                   மதுரை மீனாட்சி கோயிலுக்கு தெற்கே முற்காலத்தில் மாந்தோப்பு இருந்தது. அந்த தோப்பில் வனகாளி இருந்து வந்தாள். இந்த காளியை விஸ்வகர்ம குல மக்கள் வழிபட்டு வந்தனர். ஒரு முறை இந்த கோயில் பூஜாரி இரவு பூஜைக்கு பின், மறதியாக தன் மகனை இந்தக் கோயிலுக்குள் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டிற்கு வந்தவுடன் பூஜாரியின் மனைவி, மறந்து விட்டு வந்த தன் மகனை மீண்டும் அழைத்து வர வேண்டும் என்று கூற, பூஜாரியும் மகனை அழைக்க பூட்டிய கதவை திறந்தார். அங்கு காளியின் உக்கிரம் தாங்க முடியாத பூஜாரி அதே இடத்தில் இறந்தார்.

பின் காளிக்கு பெரிய அளவில் கோயில் கட்ட நினைத்து, அங்குள்ள மாமரத்தின் அடியில் தோண்டினார்கள். அப்போது சுயம்புவாக ஈசன் தோன்றினார். “ஆம்ர’ என்றால் வடமொழியில் “மாமரம்’ என்று பொருள். மாமரத்தின் அடியில் பாணலிங்கம் தோன்றியதால் இங்குள்ள ஈசன் ஏகாம்பரேஸ்வரர் ஆனார். எனவே காளிக்காக கட்ட நினைத்த சன்னதி, சிவ ஆகம விதிப்படியும், பிரம்மனுக்காக மீனாட்சி கொடுத்த வாக்கின் படியும், காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் சன்னதியாக மாறியது.

திருவிழா

                   நவராத்திரி, கார்த்திகை மாதத்தில் சுவாமி, அம்மன் திருவீதி உலா, மார்கழி மாதத்தில் தனுர் மாத விழா, திருவாதிரை ஆருத்ரா தரிசனம், தை மாத சங்கராந்தி.
சிறப்பு
                    இத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்
                  காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இந்த உலகின் ஆதி நாயகி பராசக்தி. இந்த பூமியில், பராசக்தியான நான் தனியாக இருந்து எப்படி ஆளப்போகிறேன் என்று நினைத்து முதலில் பிரம்மனை படைக்கிறார். பிரம்மனும் பராசக்தியை வணங்குகிறார். பின் விஷ்ணுவை படைக்கிறார். விஷ்ணுவும் பராசக்தியை வணங்குகிறார். அதன் பின்னரே சிவனை படைக்கிறார்.

சிவனோ பராசக்தியை கண்டு வணங்காமல், அவரது கண் அழகில் மயங்கி சிரிக்கிறார். (காமாட்சி என்பது ஆசையை உண்டு பண்ணக்கூடிய அட்சி(கண்). இருந்தாலும் பராசக்தியால் படைக்கப்பட்ட பிரம்மனும், விஷ்ணுவும் வணக்கம் தெரிவிக்க நாம் மட்டும் வணங்காமல், அவளது அழகை கண்டு மயங்கி சிரித்து விட்டோமே என நினைத்து சக்தியிடம் நீயும் என்னை விரும்பினால், என்னில் பாதியாக இருக்க வேண்டும் என்றவுடன் சக்தியும் சம்மதித்து சிவனின் பாதியாக கலந்து விட்டார்.

பிரம்மனின் கர்வம்: முன்பொரு சமயம் மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும், மகா விஷ்ணு தாரை வார்க்க, பிரம்மன் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்தை நடத்திக் கொடுத்த பிரம்மனுக்கு தட்சணையாக என்ன வேண்டும் என சிவன் கேட்டார். அதற்கு பிரம்மன் கர்வத்துடன், என் சிருண்டிக்கு கட்டுப்படாததை எனக்கு தட்சணையாக தர வேண்டும் என பரிகாசம் செய்தார். சிவனும் பிரம்மனின் கர்வத்தை அடக்க, “”உமது சிருஷ்டிக்கு கட்டுப்படாத தரித்திரத்தையே உமக்கு தட்சணையாக தருகிறோம்,” என்ற கூறிச் சென்றார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பிரம்மன் அன்னை மீனாட்சியிடம், “”தாயே! ஈசன் எனக்கு இப்படி ஒரு விபரீதமான தட்சணை தந்து எனது கர்வத்தை அடக்கி விட்டார். எனது இந்த தரித்திரத்தை தீர்க்க ஒரு வழி கூற வேண்டும்,” என வேண்டினார்.
அன்னை மீனாட்சியும், “”பிரம்மனே!, தாங்கள் இது குறித்து கவலைப்பட வேண்டாம். நான் இந்த மதுரை மாநகரில் காமாட்சியாக வருவேன். அப்போது என்னை வழிபட்டு உமது தரித்திரத்தை போக்கி கொள்ளுங்கள்,” என்று அருளினார்.

பிரார்த்தனை

                       குடும்பத்தில் ஏற்படும் வறுமை, குழப்பங்கள், தரித்திரத்தை போக்கி கொள்ளவும்,அடுத்தவர்களை பரிகசிப்பதை நிறுத்திக் கொள்வதோடு துன்பங்களை போக்கவும் இக்கோயிலுக்கு சென்று வழிபடலாம்.
நேர்த்திக்கடன்
                  தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல சிறப்பு
                      மிகவும் பழமையான இந்த கோயிலுக்கு கிழக்கு, வடக்கு என இரு வாயில்கள் இருந்தாலும் அம்மன் நோக்கியிருக்கும் வடக்கு வாசல் தான் பிரதான வாசல்.

கோயிலில் நுழைந்தவுடன் கொடிமரம் தாண்டி உள்ள மண்டபத்தில் துவார பாலகிகள். இவர்களுக்கு இடதுபுறம் கணபதி, சரஸ்வதி, பிரம்மா. வலதுபுறம் முருகன், லட்சுமி, விஷ்ணு. இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தரிசிக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதே போல அடுத்துள்ள மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜரும், பாணலிங்கமும் இருக்க அருகே ஆதிகாலத்து உக்கிர காளி தற்போது சாந்த சொருப காளியாக வீற்றிருக்கிறார்.

மேலும் ஐந்துமுகம், பத்து கைகள், முன்று பாதங்களுடன் காயத்ரி தேவி வீற்றிருக்க, அருகே ஏகாம்பரேஸ்வரர் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார்.அன்னை காமாட்சியே, பிற சிவ ஆலயங்களில் கிழக்கு அல்லது தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இங்கு காமாட்சியையும், ஏகாம்பரேஸ்வரரையும் ஒரே இடத்தில் நின்று கொண்டு தரிசித்து, இருவரின் அருளையும் ஒரே சமயத்தில் பெறலாம். இக்கோயில் சுவாமிகளின் அலங்காரம் மிகவும் சிறப்பான அம்சமாகும்.

கோயில் சுற்றுப்பிரகாரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, ஆஞ்சநேயர், தட்சிணாமுர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் இருக்க, ராமலட்சமணருக்கு உதவிய நளபிரம்மா தனி மண்டபத்தில் வீற்றிருக்கிறார்.

முகவரி

                          அருள்மிகு காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், 160, தெற்கு மாசி வீதி, மதுரை-625 001.

சேரன்மகாதேவி_மிளகு_பிள்ளையார்

இறைவன் அம்மநாதர்(அம்மையப்பர்)
இறைவி ஆவுடைநாயகி(கோமதியம்பாள்)
தல மரம் பலா மரம்
தீர்த்தம் தாமிரபரணி
கிராமம்/நகரம் சேரன்மகாதேவி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு
வரலாறு
                        சிவதரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர், அகத்தியரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை இட்டார். அதில் இரண்டாவது மலர் இத்தலத்தில் கரை ஒதுங்கியது. இங்கு, உரோமசர் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார்.பிற்காலத்தில், அந்த லிங்கம் ஒரு அரசமரத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர், நெல் குத்தி, அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே, தங்கள் வேலையை துவங்குவர்.

வெகுநாளாக ஒரு ஆதங்கம் அவர்களை வாட்டியது. இந்த லிங்கம், கோயிலில் இல்லாமல், மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே என்று! எனவே, சிவனுக்கு கோயில் கட்ட நினைத்தனர் அவர்கள். ஆனால், ஏழைகளான அவர்களிடம் கோயில் கட்டுமளவிற்கு பணம் இல்லை. அவர்கள் தங்களது உழைப்பின்மூலம் கிடைக்கும் பணத்தை சிறுகச்சிறுக சேர்த்து வைத்தனர்.அவர்களது பக்தியில் மகிழ்ந்தார் சிவன்.

ஒருசமயம், அடியார் வடிவில் அப்பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து, உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக்காட்டிய அவர், “”விளக்கு எரியாத வீட்டில் எவ்வாறு பிரகாசம் இருப்பதில்லையோ, அதைப்போலவே மங்களமும் இருப்பதில்லை. எனவே, மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிடமாட்டேன்,” என்று எழுந்தார். பதறிப்போய்விட்டனர் சகோதரிகள். அவசரத்தில் தேடியபோது, விளக்கு இருந்த இடத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் நெய்விட்டு, விளக்கேற்றினர்.மகிழ்ந்த சிவனடியார் சாப்பிட்டுவிட்டு, சுயரூபத்தில் காட்சி தந்தார். சகோதரிகள் சிவனை வணங்கினர். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக்கொண்டு இங்கு கோயில் எழுப்பினர்

திருவிழா

                  ஐப்பசி திருக்கல்யாணம்.
சிறப்பு
                      இத்தலம் நவகைலாயங்களில் ஒன்று கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.
திறக்கும் நேரம்
                             காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்
                           ஐந்து நிலை ராஜகோபுரம். பிரகாரத்தில் ஒரே கல்லில் செய்யப்பட்ட நடராஜரும், நாய் வாகனம் இல்லாத பைரவரும் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது. சந்திரன், நுழைவு வாசலின் வலப்புறத்தில் இருக்கிறார். மகாவிஷ்ணு, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சுப்பிரமணியர், கஜலட்சுமி, சனீஸ்வரர், நவகன்னிகள் ஆகியோரும் இருக்கின்றனர்.
பிரார்த்தனை
                            அரிசி வியாபாரிகள் சுவாமிக்கு அரிசி நேர்த்திக்கடன் செலுத்தி வேண்டிக்கொள்கிறார்கள். இதனால், வியாபாரம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்
                               சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு
                         கொடிமரத்தின் கீழ் நந்தனார்: தாமிரபரணி நதியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் சிவன், சந்திர அம்சத்துடன் காட்சி தருகிறார். கோயிலுக்கு அருகிலேயே தாமிரபரணி ஓடுகிறது. கிழக்கு நோக்கி அருளும் சிவனை, “அம்மநாதர்’ என்றும், “அம்மையப்பர்’ என்றும் அழைக்கிறார்கள். இவரது சன்னதிக்கு வலப்புறம் ஆவுடைநாயகி அருளுகிறாள். (மதுரை மீனாட்சி கோயில் போன்ற அமைப்பு).

இவளுக்கு கோமதியம்பாள் என்றும் பெயருண்டு. இந்த அமைப்பை சிவன், அம்பாளின் திருமணக்கோலம் என்பர். இக்கோயிலை நந்தனார் தரிசித்திருக்க வேண்டும். இவரது சிற்பம் கொடிமரத்திற்கு கீழேயுள்ள பீடத்தில் இருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகியிருக்கிறது. கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.

சிறப்பம்சம்

                             அரிசி வியாபாரிகள் தங்கள் வியாபாரம் செழிக்க, இங்கு வந்து அரிசிதானம், அன்னதானம் செய்கின்றனர். திருமண தோஷம் உள்ளவர்கள், மாதுளம் பழச்சாறு அபிஷேகம் செய்து, அம்பாள் சன்னதி முன்பு தட்டில் அரிசியை பரப்பி, அதன் மத்தியில் உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றுகின்றனர். பலா மரம் இத்தலத்தின் தலவிருட்சம்.இக்கோயிலை கட்டிய சகோதரிகள் நெல் குத்தி, அரிசி புடைக்கும் சிற்பம், முன்மண்டபத்திலுள்ள ஒரு தூணில் இருக்கிறது. அருகில் மற்றொரு தூணில் லிங்கபூஜை செய்யும் உரோமசரைக் காணலாம்.

முகவரி

                            அருள்மிகு அம்மநாதர் திருக்கோயில், சேரன்மகாதேவி- 627 414. . திருநெல்வேலி மாவட்டம்

பாரியூர்_ஆதிநாராயணப்பெருமாள் - பாரியூர்_கொண்டத்து_காளியம்மன் -

இறைவன் அமரபணீஸ்வரர்
இறைவி சவுந்திரநாயகி
தல மரம் மகிழம்
தீர்த்தம் கிணற்று நீர்
புராண பெயர் பழம்பெரும்பதி
கிராமம்/நகரம் பாரியூர்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு
வரலாறு
                   தேவர்களை தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அசுரர்கள் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். தேவர்களால் அசுரர்களை எதிர்க்க முடியவில்லை. எனவே, அவர்கள் சிவனை சரணடைந்து தங்களை அசுரர்களிடம் இருந்து காத்தருளும்படி வேண்டினர். சிவன் தன்னை வேண்டி தவம் செய்யும்படி கூறினார். அதன்படி தேவர்கள் இவ்விடத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, சிவனை வேண்டி தவமிருந்து வழிபட்டனர். அவர்களுக்கு காட்சி தந்த சிவன், அசுரர்களை அழித்து தேவர்களை காத்தருளினார். தேவர்களுக்காக அசுரர்களை அழிக்கும் பணியைச் செய்த சிவன் என்பதால், “அமரபணீஸ்வரர்’ என்ற பெயரும் பெற்றார். தேவர்களுக்கு அமரர்கள் என்ற பெயரும் உண்டு.

திருவிழா

                  சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆனி திருமஞ்சனம், ஐப்பசி அன்னாபிஷேகம்.
சிறப்பு
                   மார்ச் மாதத்தில், சூரியன் அஸ்தமனமாகும் மாலை வேளையில் இரண்டு நாட்கள் சுவாமியின் மீது, தன் ஒளியைப்பரப்பி பூஜை செய்கிறார். அப்போது ஒளியானது சுவாமியின் பாணம் முழுதும் விழுகிறது.
திறக்கும் நேரம்
                          காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்
                         இக்கோயில் முழுக்கமுழுக்க பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. நவக்கிரக சன்னதியில் சூரியன் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். பிரகாரத்தில் சிவன், மீனாட்சி இருவரும் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கின்றனர். பைரவர், துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், பஞ்சலிங்கங்கள், அறுபத்துமூவர் ஆகியோரும் உள்ளனர். இக்கோயிலுக்கு அருகிலேயே பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலவிநாயகர்: அனுக்கை விநாயகர்

பிரார்த்தனை

                          எதிரிகளால் தொல்லை உள்ளவர்கள் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். இதனால் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. இத்தலம் போன்ற  சோமாஸ்கந்த தலங்களில் வேண்டிக்கொண்டால் திருமண, புத்திரதோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு அதிகளவில் தோஷ பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது.தந்தை, மகன்கள் இங்கு வேண்டிக்கொள்ள அவர்களுக்குள் ஒற்றுமை, அன்பு கூடும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்

                           சுவாமிக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கிறார்கள்.
தல சிறப்பு
                       சுவாமியை அதிகாலை வேளையில் தேவர்களும், சூரியனும் வழிபடுவதாக ஐதீகம். எனவே, இக்கோயில் தினமும் சூரிய உதயத்திற்கு பின்புதான் திறக்கப்படுகிறது. சிவன், எப்போதும் தன்னை வணங்குவதை விட, தனது அடியார்களை வணங்குவதையே விரும்புகிறார். இதன் அடிப்படையில் இங்கு வருபவர்கள் முதலில் சூரியனை வழிபட்டுவிட்டு, அதன்பின்பே சுவாமியை வழிபடும் வழக்கம் உள்ளது. சூரிய வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இக்கோயில் அமைந்துள்ளது சிறப்பு. சூரியனை வணங்கி சிவனை வணங்கினால் கிரகதோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

சிவனது கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி, தெற்கு பார்த்தபடி கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அவருக்கு எதிரில் முருகன் கருவறை கோஷ்டத்தில் உள்ள பாலசுப்பிரமணியர், ஆறு கரங்களுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். முருகன், சிவனுக்கே குருவாக இருந்து “ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தார். முருகனுக்கு தந்தையாக இருந்தாலும், அவரை குரு ஸ்தானத்தில் வைத்த சிவன் பணிவாக மந்திரப்பொருளை கேட்டுக் கொண்டார்.இவ்விடத்தில் தந்தை குரு தெட்சிணாமூர்த்தியாக இருப்பதால், அவருக்கு மரியாதை கொடுக்கும்படியாக எதிரே முருகன் நின்றகோலத்தில் இருக்கிறார். சிவன், முருகன் இவ்விருவரையும் இவ்வாறு எதிரெதிரே பார்ப்பது அரிது.

கருவறையில் சிவன் மேற்கு பார்த்தபடி இருக்கிறார். ஆவுடையார் வலதுபுறத்தில் இருக்கிறது. அம்பாள் சவுந்திரவல்லி, சுவாமிக்கு இடது புறத்தில் தனிச்சன்னதியில் நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவ்விருவரின் சன்னதிகளுக்கு நடுவே சண்முகசுப்பிரமணியர் இடது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன், அருளுகிறார். அருகில் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர். இதனை “சோமாஸ்கந்த’ அமைப்பு என்பர்.  சுப்பிரமணியரின் கோஷ்ட சுவரில் கார்த்திகேயன், பாலசுப்பிரமணியர், தண்டாயுதபாணி, குமார சுப்பிரமணியர், பாலமுருகன் என முருகனின் ஐந்து வடிவங்கள் உள்ளன. முருகனின் ஆறு கோலங்களை இங்கு ஒரே இடத்தில் தரிசிப்பது விசேஷம்.

முகவரி

                     அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில், பாரியூர் – 638 476. ஈரோடு மாவட்டம்.

ஞீலிவனேஸ்வரர் உடனுறை விசாலாட்சி திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி என்ற இடத்தில் அமைந்துள்ளது.திருப்பைஞ்ஞீலி கோயில் திருநாவுக்கரசர் – 1,திருஞானசம்பந்தர் – 1,சுந்தரர் – பாடல் பெற்றது.

வழி

இத்தலம் திருச்சிக்கு அருகில் சுமார் 12 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக திருப்பைஞ்ஞீலி செல்ல நகரப் பேருந்து வசதிகள் உண்டு.
கோயில் பற்றி

கோவில் அமைப்பு

ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞிலி என்று இத்தலம் பெயர் பெற்றது. ஞீலிவனேஸ்வரர் ஆலயம் முதலில் ஒரு முற்றுப்பெறாத மொட்டை கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. இந்த முதல் கோபுரத்தின் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு 4 கால் மண்டபமும் அதன் பின்புறம் 3 நிலைகளை உடைய இராவணன் வாயில் என்று கூறப்படும் இரண்டாவது நுழைவு கோபுரமும் உள்ளது. இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் முன் இடதுபுறம் சோற்றுடை ஈஸ்வரர் சந்நிதி காணப்படுகிறது. திருநாவுக்கரசருக்கு அந்தணர் உருவில் வந்து உணவு படைத்து திருப்பைஞ்ஞிலி தலம் வரை கூட்டிவந்து சிவபெருமான் மறைந்து போன இடம் இதுவென்றும், பின்பு திருநாவுக்கரசருக்கு லிங்க உருவில் இவ்விடத்தில் காட்சி கொடுத்தருளினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. அந்த லிங்க உருவே சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில் இச்சந்நிதியில் அருள் பாலிக்கிறார். சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் இச்சந்நிதியில் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா நடைபெறுகிறது.

எமன் சந்நிதி

 

இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லாமல் வெளி சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்தால் எமன் சந்நிதியைக் காணலாம். இச்சந்நிதி ஒரு குடைவரைக் கோவிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். இந்த சந்நிதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர். திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமிதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள்.மற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்துத் தருமாறு முறையிட்டனர். சிவபெருமான் அதற்கிணங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.

சனீஸ்வரனின் அதிபதி எமன் என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளதாலும் திருப்பைஞ்ஞிலி ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை. இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக சுவாமி சந்நிதி செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இறங்கி செல்ல வேண்டும் இந்த படிகள் இராவணின் சபையில் ஒன்பது நவக்கிரங்களும் அடிமைகளாக இருந்ததை குறிப்பிடுவதாக சொல்கிறர்கள். சுவாமி சந்நிதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதில் தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்கள் ஆக எண்ணி வணங்குகின்றனர்.

இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று திருக்கார்த்திகை வாயிலில் நுழைந்து மூலவர் ஞீலிவனேஸ்வரர் சந்நிதியை அடையலாம். இங்குள்ள லிங்கமூர்த்தி ஒரு சுயம்பு லிங்கமாகும். எமனுக்கு உயிர் கொடுத்து மீண்டும் தனது தொழிலைச் செய்துவர அதிகாரம் கொடுத்து அருளியதால் இத்தலத்து இறைவன் அதிகாரவல்லபர் என்றும் அழைக்கப்படுகிறார். மகாவிஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயு பகவான், அக்கினி பகவான், இராமர், அர்ச்சுணன், வஷிஷ்ட முனிவர் ஆகிய பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். மூலவர் சந்நிதியில் இரத்தின சபை இருக்கிறது. வசிஷ்ட முனிவருக்கு அவரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சிவபெருமான் நடன தரிசனம் தந்து அருளிய இரத்தின சபை தலம் இதுவாகும். இத்தலத்திற்கு மேலச் சிதம்பரம் என்ற பெயருமுண்டு.

இக்கோவிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை சிவயோகத்திலிருக்க விரும்பி இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள் செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்கு பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். வாழைப் பரிகார பூஜை நேரம் காலை 8-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலையில் 4-30 மணிமுதல் 5-30 மணி வரையிலும் நடத்தப்படும்.

திருநாவுக்கரசருக்கு இறைவன் பொதிசோறு கொடுத்தருளிய தலம் திருப்பைஞ்சீலி ஆகும். திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருநாவுக்கரசர் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் நீர்வேட்கையும், பசியும் அவரை வாட்டின. எனினும் மனம் தளராமல் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் களைப்பைப் போக்க இறைவன் எண்ணினார். அவர் வரும் வழியில் ஒரு குளமும் தங்கி இளைப்பாறும் மண்டபமும் உருவாக்கி கூட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் உருவத்தில் இறைவன் காத்துக் கொண்டிருந்தார். களைத்து வந்த அப்பருக்கு தன்னிடம் உள்ள பொதிச்சோற்றை உண்டு குளத்து நீரைப் பருகியும் மேலே செல்லும்படி வற்புறத்தினார். அப்பரும் ஒன்றும் கூறாமல் உண்டு களைப்பாறினார். அந்தணரை நீர் எங்கு செல்கிறீர் என்ரு அப்பர் கேட்டதற்கு தானும் திருப்பைஞ்சீலி செல்வதாக இறைவன் கூற இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். திருப்பைஞ்சீலி ஆலயம் அருகே வந்தவுடன் அந்தணர் மாயமாய் மறைந்துவிட்டார். அப்போது தான் இறைவனே அந்தணராக வந்து தனக்கு உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார்.

தல வரலாறு

  • ஞீலி – இது ஒருவகை வாழை; தனி இனம். வேறிடத்தில் பயிராவதில்லை. இதன் இலை, காய், கனி அனைத்தும் இறைவனுக்கே பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மனிதர்கள் உண்டால் பிணி வருதல் இன்றும் கண்கூடு. இக்கனியைச் சுவாமிக்கு நிவேதித்து தண்ணீரில் விட்டுவிடுவார்கள்.
  • இறைவன் அப்பர்பெருமானுக்கு பொதி சோறளித்துப் பசியைப் போக்கிய தலம்.
  • இங்கு வசிட்டமுனிவருக்கு நடராசப் பெருமான் நடனக் காட்சியருளியதால், இத்தலம் மேலைச்சிதம்பரம் என்றும் பெறுகின்றது.

சிறப்புக்கள்

  • ஞீலிவனம், கதலிவனம், அரம்பைவனம், விமலாரண்யம், தரளகிரி, சுவேதகிரி, வியாக்ரபுரி, மேலைச்சிதம்பரம் முதலியன இத்தலத்திற்குரிய வேறுபெயர்கள்.
  • மதிலின் மேற்றளம் புலிவரிக் கற்களால் ஆனவை. (இவ்வகைக் கற்கல் இங்கு மட்டுமே கிடைக்கின்றன. இதன் காரணமாகவே இத்தலம் வியாக்ரபுரி என்னும் பெயரைப் பெற்றதுபோலும்.)
  • இரண்டாங் கோபுரவாயிலில் அப்பருக்குக் கட்டமுது தந்து அருள்புரிந்து மறைந்த இடமான – கோயில், நிலமட்டத்திற்குக் கீழே அமைந்துள்ளது.
  • கோயில் அமைப்பு பல்லவர் கால அமைப்புடையது.
  • சோழர் காலக் கல்வெட்டுக்களில் “பைஞ்ஞீலி மகாதேவர், பைஞ்ஞீலி உடையார் ” என்னும் பெயர்களால் இறைவன் குறிக்கப்படுகிறார்.
  • இத்தலத்திற்கு மதுரை மெய்ப்பாத புராணிகர் தலபுராணம் பாடியுள்ளார்.

இறைவன் சுவர்ணபுரீஸ்வரர்
இறைவி சுகந்த குந்தளாம்பிகை
தல மரம் வன்னி, வில்வம்
தீர்த்தம் சூரிய தீர்த்தம்
புராண பெயர் இலக்குமிபுரி,கந்தபுரி, இந்திரபுரி
கிராமம்/நகரம் செம்பொனார்கோவில்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
வரலாறு
                         பிரம்மாவின் மானச புத்திரரான தட்சன் தன் மகள் தாட்சாயினியை இறைவன் சுவர்ணபுரீஸ்வரருக்கு மணமுடித்து தருகிறார். தனது அகந்தையால் தனது யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் தன் தந்தை தட்சனை திருத்தி நல்வழிப்படுத்த தாட்சாயினி இத்தலத்திலிருந்து திருப்பறியலூருக்கு சென்றபோது ஆணவத்தினால் சிவனையும் சக்தியையும் நிந்தித்து விடுகிறார். தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டடும் என்று சாபம் இடுகிறார். அத்துடன் சிவனிடம் தட்சனை தண்டிக்கும் படி வேண்டுகிறார். சிவனும் வீரபத்திரர், பத்திரகாளி ஆகியோரை தோற்று வித்து யாகத்தை அழித்து தட்சனையும் சம்ஹாரம் செய்து விடுகிறார்.தாட்சாயிணியும், சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீர வேண்டி இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் கடும் தவம் புரிகிறார். சிவனும் தாட்சாயிணியை மன்னித்து சுகந்த குந்தளாம்பிகை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகில் இருந்து அருளாட்சி செய் என்று அருள்பாலிக்கிறார்.

திருவிழா

                       சித்திரை மாதம் 7ம் நாள் முதல் 18 நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது மிகவும் விசேஷம். இந்த நாட்களில் விசேஷ பூஜைகளும், 9 நாள் பெருந்தேர் விழாவும் “சவுரமகோற்சவம்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
சிறப்பு
                        இங்குள்ள சிவலிங்கம் பதினாறு இதழ்களுடைய தாமரை இதழ் போன்ற ஆவுடைகளில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம் 7ம் நாள் முதல் 18 நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது மிகவும் விசேஷம்.
திறக்கும் நேரம்
                   காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்
                    லட்சுமி, திருமாலை தன் கணவனாக அடைந்ததும் இத்தல இறைவனை வழிபட்டு தான்.எனவே தான் இத்தலத்திற்கு இலக்குமிபுரி என்று பெயர் வந்தது. இந்திரன் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்து விருத்திராசூரனை வெல்ல வச்சிராயுதம் பெற்றான். இதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் உண்டு.முருகப்பெருமான் இத்தல இறைவனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் இத்தலத்திற்கு கந்தபுரி என்றும் பெயர் உண்டு.

பிரார்த்தனை

                    எது வேண்டுமானாலும் கேட்கலாம். அனைத்தையும் நிறைவேற்றி தருகிறார். குறிப்பாக தியானப்பயிற்சி செய்பவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு தியானப்பயிற்சி ஆரம்பிப்பது சிறப்பு.

நேர்த்திக்கடன்

                   நமக்கு எது வசதியோ அதன் படி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக்கொள்ளலாம். குறிப்பாக வஸ்திரம் சாற்றி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
தல சிறப்பு
                    சிவனின் சொல் கேட்காமல் பார்வதி தன் தந்தையின் யாகத்திற்கு செல்கிறார். இதனால் சிவன் பார்வதியை தன்னுடன் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார். எனவே முருகப்பெருமான் சிவன் வடிவில் தன் தாய்க்கு நல்ல போதனைகளை எடுத்துக்கூறினார். இதனாலேயே இங்குள்ள முருகன் கையில் அட்சய மாலையுடன் காட்சி தருகிறார். இத்தலத்தில் தான் சிவபெருமான் வீரபத்திரராக தோன்றுகிறார். ரதி, மன்மதனை தன் கணவனாக அடைந்தது“இத்தல இறைவனை வழிபட்டு தான். வட்டவடிவமான ஆவுடையாருள்ள இம் மூர்த்தி திருமாலால் பூஜிக்கப்பட்டவர்.

இரண்டு கரங்களே உடைய சுகந்த குந்தளாம்பிகை தேவிக்கு, புஷ்பாளகி, தாட்சாயிணி, சுகந்தளாகி, சுகந்தவன நாயகி, மருவார் குழலி என்ற திருநாமங்களும் உண்டு. சித்திரை மாத அமாவாசையிலும், வைகாசியிலும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் விலகும்.

பாடியவர்கள்

                     திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் பாடல் பெற்றது. தேவாரப்பதிகம் மழுவாள் ஏந்தி மாதோர் பாகமாய்ச் செழுவார் செம்பொன் பள்ளி மேவிய எழிலார் புரிபொன் சடையெம் மிறைவனைத் தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே.
-திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 42வது தலம்.

முகவரி

                 செம்பொனார் கோவில், சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொன்பள்ளி-609309. செம்பொன்னார்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம்.

சிவஸ்தலம் பெயர் : திருமயேந்திரப்பள்ளி
ஆலயம் பற்றி 

தல வரலாறு இன்று மக்கள் வழக்கில் மகேந்திரப்பள்ளி என்று வழங்கப்படுகிறது. பண்டை நாளில் (மன்னன் ஆண்ட பகுதி) இருந்த பகுதி கோயிலடிப்பாளையம் என்பது. அருகில் உள்ள தீவுகோட்டையில் கண்டெடுக்கப்பட்ட நடராசத் திருமேனிதான் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. சிறப்புக்கள் ஆங்கிலேயர் ஆட்சியில், கிளைவ், இங்கு மன்னன் ஒருவன் ஆண்டு வந்த பகுதியைக் குண்டுவைத்துத் தகர்த்ததாகவும் அப்பகுதி இன்றும் தீவுக்கோட்டை என்று வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள இவ்விடத்தில் பழமையான கொடிக்கம்பம், கொடிமேடை முதலிய சின்னங்கள் உள்ளன. இங்கு மிக அழகான மூர்த்தத்தையுடைய விஜயகோதண்ட ராமசாமிப் பெருமான் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கும், தீவுகோட்டை நடராசருக்கும் தனித்தனியே அரசால் மோகினிப் பணம் தரப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் இன்றும் பங்குனித் திங்களில் ஒரு வாரம் சூரியஒளி சுவாமி மீது படுகிறது. இதைச் சூரிய வழிபாடாகக் கொண்டாடுகின்றனர். 

 

சிவஸ்தலம் பெயர் : திருமயேந்திரப்பள்ளி
இறைவன் பெயர் : திருமேனியழகர், அந்தமிலா அழகர்
இறைவி பெயர் : வடிவாம்பிகை
தல மரம் : கண்டமரம், தாழை
தீர்த்தம் : மயேந்திரதீர்த்தம்
வழிபட்டோர்: இந்திரன், மயேந்திரன், சந்திரன்
எப்படிப் போவது : சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக சென்று திருமயேந்திரப்பள்ளி சிவஸ்தலம் அடையலாம். அருகில் உள்ள மற்றொரு சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் (ஆச்சாள்புரம்). 3 கி. மி. தொலைவில் உள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருமயேந்திரப்பள்ளி 

 

இறைவன் பிரத்யங்கிராதேவி
தல மரம் ஆலமரம்
கிராமம்/நகரம் அய்யாவாடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
வரலாறு
                   மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது, சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்டான். ராமன் அவனுடன் போரிட இலங்கை சென்றார். தன் சகோதரர்களையும், மகன்களையும் வரிசையாக ராமனுடன் போரிட அனுப்பிய ராவணன், எல்லாரையும் இழந்தான். மிகுந்த பலசாலியான இந்திரஜித் ஒருவன் எஞ்சியிருந்தான். காளி பக்தனான அவன், ராமனை போரில் தோற்கடிப்பதற்காக அவளை வேண்டினான். மன்னர்கள் அக்காலத்தில் போரில் வெற்றி பெறுவதற்காக, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோற்றுவித்து அதர்வணகாளியான பிரத்யங்கிரா தேவி’க்கு நிகும்பலா யாகம் நடத்துவார்கள்.

அந்த யாகத்தை இந்திரஜித்தும் பிரம்மாண்டமாக நடத்தினான். நிகும்பலா யாகம் மட்டும் முடிந்து விட்டால் இந்திரஜித் மாபெரும் சக்தியை அடைந்து விடுவான். அதன் பின் அவனை போரில் வெல்ல யாராலும் முடியாது. இந்த விஷயம் ராமனுக்கு தெரிந்து விட்டது. ராமபிரானும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.    இந்திரஜித் அநியாய வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்துவதையும், பரமாத்மாவான ராமன் நியாயத்திற்காக யாகம் நடத்துவதையும் அறிந்து கொண்டாள் பிரத்யங்கிரா. ராமரின் யாகத்திற்கும், அவரது நியாயமான கோரிக்கைக்கும் செவி சாய்த்த தேவி அவருக்கு அனுக்கிரஹம் புரிந்தாள்.

தன் நீண்ட நாள் பக்தனாயினும், அநியாயத்துக்கு துணைபோன இந்திரஜித்தின் பூஜையை ஏற்க மறுத்துவிட்டாள். எனவே இந்திரஜித் போரில் தோற்றான். இருந்தாலும், தன் பக்தன் என்ற முறையில், அவனது வீரம் ராமாயணத்தில் புகழப்படும் வகையில் ஆசி தந்தாள்.

திருவிழா

               இங்கு அமாவாசை தோறும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை நிகும்பலா யாகம்’ நடக்கிறது.
சிறப்பு
                  தலவிருட்சம் ஆலமரம். இதில் ஆல், அரசு, புரசு, இச்சி, மா இலைகள் இருப்பது விசேஷம். மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் கொட்டுவார்கள். சாதாரணமாக ஒரு மிளகாய் வத்தலை தீயில் போட்டாலே நெடி இருக்கும். ஆனால், நிகும்பலா யாகத்தில் மூடை மூடையாக போடப்படும் மிளகாய் வத்தலிலிருந்து சிறிது நெடி கூட இருக்காது. கலியுகத்தில் இது மாபெரும் அதிசயம்.
திறக்கும் நேரம்
              காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்
                 கோயில் விமானம் வடமாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. பிரத்யங்கிரா தேவி தனி சன்னதி கொண்டு வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறாள்.

பிரார்த்தனை

                     நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், எதிரிகளின் தொல்லை விலகும், கடன் தொல்லை தீரும், உத்தியோக உயர்வு கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு உருவாகும், திருமண பாக்கியம் விரைவில் கிடைக்கும், வியாபாரம் செழிக்கும் என்பது நம்பிக்கை. சனி தோஷம் உள்ளவர்களும் யாகத்தில் பங்கேற்கின்றனர்.

நேர்த்திக்கடன்

                 அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு
                    தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. சம்பந்தர் இத்தல சிவனை குறித்து பாடியுள்ளார். மூலவராக அகஸ்தீஸ்வரர் கிழக்கு நோக்கி உள்ளார். அம்மன் தர்மசம்வர்த்தினி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். தலவிருட்சம் ஆலமரம். இதில் ஆல், அரசு, புரசு, இச்சி, மா இலைகள் இருப்பது விசேஷம்.

பிரத்யங்கிராதேவி

                      இவள் சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவள். சிம்ம முகம், 18 கரம், சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறாள். கரிய நிறத்துடன் தலையில் சந்திரகலை அணிந்து சூலம், பாசம், டமருகத்துடன் இருபுறமும் லட்சுமி, சரஸ்வதி தேவியுடன் அட்டகாசமாக வீற்றிருக்கிறாள்.
மிளகாய் வத்தல் யாகம்
                   இங்கு அமாவாசை தோறும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை நிகும்பலா யாகம்’ நடக்கிறது. மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் கொட்டுவார்கள். சாதாரணமாக ஒரு மிளகாய் வத்தலை தீயில் போட்டாலே நெடி இருக்கும். ஆனால், நிகும்பலா யாகத்தில் மூடை மூடையாக போடப்படும் மிளகாய் வத்தலிலிருந்து சிறிது நெடி கூட இருக்காது. கலியுகத்தில் இது மாபெரும் அதிசயம்.    மேலும் 108 வகை ஹோம சாமான்கள் குண்டத்தில் இடப்படும். பட்டு புடவை, பழ வகைகளும் இதில் அடக்கம். யாகம் முடிந்ததும், புனித கலசநீரால் சரபேஸ்வரருக்கும், பிரத்யங்கிரா தேவிக்கும் அபிஷேகம் நடத்தப்படுகிறது. சனிபகவானின் மகன் குளிகன் இங்கு வழிபாடு செய்துள்ளதால் ஜாதக ரீதியாக சனி தோஷம் உள்ளவர்களும் யாகத்தில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் நடக்கும் இந்த யாகத்தில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

முகவரி

                        அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், அய்யாவாடி – தஞ்சாவூர் மாவட்டம்.

இறைவன் குமார சுவாமி
தல மரம் வேங்கை மரம்
தீர்த்தம் தெப்பக்குளம்
புராண பெயர் வேள்விமலை
கிராமம்/நகரம் குமார கோயில்
மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு
வரலாறு
                    முருகப்பெருமானுக்கு தமிழகத்தில் இருக்கும் 6 படை வீடுகளோடு ஏழாவது படைவீடாக இணைந்திருக்க வேண்டிய திருக்கோயில். குமரி மாவட்டத்தின் இந்த பகுதி கேரள மாநிலத்தோடு இருந்துவிட்டது. மேலும் நம்பி ராஜன் வாழ்ந்த இடமாக இது இருக்கிறது. முருகப்பெருமான் இங்குதான் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மிகவும் பழமையான இக்கோயிலில் தென் கிழக்கு பக்கமாக திரும்பி சுவாமியோடு வள்ளி இருக்கிறார். கேரள எல்லையில் அமைந்துள்ள இக்கோயில் அப்பகுதியில் மிகப்பிரபலமாகக் கருதப்படுகிறது.

திருவிழா

                வைகாசி விசாகத் திருவிழா – 10 நாள் ஆவணி கடைசி வெள்ளி – புஷ்பாபிஷேகம் – 1 நாள் பங்குனி திருக்கல்யாணம் – 7 நாள்.
சிறப்பு
                வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது.மூலவர் முருகப்பெருமான் 10அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும்.
திறக்கும் நேரம் 
                 காலை 6மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்
              மிகவும் பழமையான இக்கோயிலில் மூலவர் தென்கிழக்கு பக்கமாக திரும்பி சுவாமியோடு வள்ளி இருக்கிறார். 10 அடி உயர சிலையாக சுவாமி பிரமாண்டமாக காட்சி தருவது சிறப்பு. சுவாமியின் காதுகள் நீண்டு காணப்படுகிறது. இதை வைத்து பார்க்கின்ற போது இந்த சுதை புத்தர்கால கட்டத்தை சேர்ந்தது என்றும் கூறுகிறார்கள். சுதை சாதாரண கல் வகையை சேர்ந்ததாக  இல்லாமல் மிகவும் உறுதியுடன் இருப்பதாகவும் அர்ச்சகர்கள் கூறுகிறார்கள்.

பிரார்த்தனை

                        இத்தலத்தில் வேண்டும் அனைத்து காரியங்களும் நிறைவேறுகின்றன. வேண்டுவோர்க்கு வேண்டுவன நல்கியருளும் கடவுளாக வேலிமலைக் கடவுள் திகழ்கிறார். திருமணம், குழந்தை பாக்கியம், வியாபார விருந்தி, கல்வி ஞானமும், உடல்பலமும் கொடுக்கும் தெய்வமாக திகழ்கிறார். மனபலம், உடல் பலம் ஆகியவை தருபவராகவும், மனதுக்கு அமைதியும் தரும் சிறப்பு பெற்றவராகவும் உள்ளார். இங்குள்ள இறைவனை மலையேறி வணங்கினால் நம் உடற்பிணியெல்லாம் விட்டு விலகும் என பக்தர்கள் கூறுகிறார்கள்.

நேர்த்திக்கடன்

                           மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்கல், பொங்கல் படைத்தல், சுவாமிக்கு சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.
தல சிறப்பு
                  கேரள எல்லையில் உள்ள மிக முக்கிய முருகன் கோயில்.கஞ்சி தர்மம் வாங்கி சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும்.குறவர் படுகளம் – வள்ளி தோழியரோடு தினைப்புனம் விளையாடிய இடமாக கருதப்படுகிறது.

முகவரி

                        அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை – 629 175 நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம்.

அநேகதங்கா பதேஸ்வரர் உடனுறை காமாட்சி அம்மன் திருக்கோயில் கச்சி அநேகதங்காபதம் என்ற இடத்தில் அமைந்துள்ளது .கச்சி அநேகதங்காபதம் கோயில் சுந்தரர் – 1 பாடல் பெற்றது.

வழி

            காஞ்சிபுரம் நகரில் இருந்து வடமேற்கே 3 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் இருக்கின்றன.

கோயில் பற்றி

                  அநேகதங்காபதம் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. ஒன்று வடநாட்டில் ஹரித்வார் – கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள கெளரிகுண்டம் சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டும். மற்றொன்று காஞ்சீபுரத்திலுள்ள இத்தலம்.

இறைவன் அன்னகாமு
கிராமம்/நகரம் ஒட்டன்சத்திரம்
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு
வரலாறு
                1942-ம் ஆண்டு தும்மிச்சம்பட்டியை சேர்ந்த பெரியாக்கவுண்டர் என்பவரின் சொந்த பராமரிப்பில் கோயில் இருந்துள்ளது. அவர் காமாட்சியம்மனுக்கு காவல் தெய்வமான கருப்பணசாமி சிலையை உருவாக்கி ஸ்தாபித்துள்ளார். அக்காலத்தில் இக்கோயிலில் சிவராத்திரி விழா மட்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. தனியாரின் பராமரிப்பில் மரத்தடியில் சிறியதாக இருந்த கோயிலை கோபுரத்துடன் உருவாக்க திருப்பணிக்குழு உறுப்பினர்கள் நிதி வசூல் செய்து கோபுரம் எழுப்பியுள்ளனர்.தனலட்சுமி என்பவர் காமாட்சியம்மன் சிலையை கோயிலுக்கு வழங்கி உள்ளார். அம்மனின் தலையில் அலங்கரிக்கும் வெள்ளி கிரீடம் மிகவும் அழகாக இருக்கும்,

திருவிழா

           நவராத்திரி
சிறப்பு
                    பழங்காலத்தில் மூங்கில் மரத்தடியில் அரளி செடிகளுக்கு நடுவில் சிறிய அளவில் காமாட்சியம்மன் அருள் பாலித்துள்ளார். அதனால் “மூங்கிலடி அன்னகாமு’ என்று அழைக்கப்பட்டாள். இதற்கான ஆதாரம் கோயில் கல்வெட்டுக்களில் இன்றும் உள்ளது.
திறக்கும் நேரம்
                         காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்
                   இத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ள திருத்தலங்கள் :அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில்,அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில், அருள்மிகு இடும்பன் திருக்கோயில்,அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில்,அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்

பிரார்த்தனை

 
                     காமாட்சியம்மன் தன்னை நாடிவரும் பெண்களுக்கு குழந்தைபாக்கியம் கொடுக்கும் சக்தி உள்ள தெய்வமாகும் .
திருமணம் ஆகாதவர்களுக்கும் விரைவில் திருமணம் கூடும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் நிலவி வருகிறது.

நேர்த்திக்கடன்

              பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு புடவை சாத்தியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
தல சிறப்பு
                   கோயிலில் அஷ்டலட்சுமியும், சக்திவிநாயகரும் அமர்ந்துள்ளனர். 63 நாயன்மார்களை நினைவு படுத்தும் விதமாக 63 தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

முகவரி

                     அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில், ஒட்டன்சத்திரம் – 624 619 திண்டுக்கல் மாவட்டம் .

இறைவன் முருகன்
தல மரம் வன்னி மரம்
தீர்த்தம் சரவணப்பொய்கை தீர்த்தம்
கிராமம்/நகரம் எட்டுக்குடி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
வரலாறு
                   நாகப்பட்டினம் அருகிலுள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான். “சரவணபவ’ என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதிய வண்ணம் இருந்த இவன், அழகிய ஆறுமுகம் கொண்ட வேலவன் சிலையை செய்தான். அப்போது ஆட்சியில் இருந்த பரந்த சோழ மன்னன், அச்சிலையின் அழகைப்பார்த்து ஆனந்தம் கொண்டான். இது போல இன்னொரு சிலையை செய்யக்கூடாது என்பதற்காக, அந்த சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டான். அவன் வருத்தத்துடன் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்தான். கைவிரல் இல்லாத நிலையிலும் கடுமையான முயற்சி எடுத்து மற்றொரு சிலையை செய்தான். அதை அவ்வூரை ஆண்ட குறுநில மன்னன் முத்தரசன் பார்த்தான். அந்த சிலையிலிருந்து ஒளி வீசியது. வேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிர் வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது. மன்னன் அந்நேரத்தில் வர அதை “எட்டிப்பிடி’ என உத்தரவிட்டான். காவலர்கள் மயிலை பிடித்தனர். அதன் கால்களை சிறிதளவு உடைத்தனர். அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. எட்டிப்பிடி என்ற வார்த்தை காலப்போக்கில் “எட்டிக்குடி’ என மாறி தற்போது “எட்டுக்குடி’ ஆனது. அதுவே ஊரின் பெயராகவும் நிலைத்து விட்டது. இதே சிற்பி மற்றொரு சிலையையும் வடித்தான். அதை எண்கண் என்ற தலத்தில் வைத்தான். சிற்பி முதலில் வடித்த சிலை சிக்கலிலும், அடுத்த சிலை எட்டுக்குடியிலும் வைக்கப்பட்டது. இந்த மூன்றுமே உருவத்தில் ஒரே தோற்றம் கொண்டவை.

திருவிழா

                    சித்ரா பவுர்ணமி திருவிழா இங்கு பத்து நாட்கள் நடக்கும். பவுர்ணமி நாளுக்கு முந்தைய நாளே நடை திறக்கப்பட்டு பாலபிஷேகம் துவங்கும். பவுர்ணமிக்கு மறுநாள் வரை தொடர்ந்து நடை அடைக்காமல் பாலபிஷேகம் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். பவுர்ணமிக்கு முதல் தேரோட்டம் நடத்தப்படும். இவ்விழாவில் குறைந்தபட்சம் 23 ஆயிரம் பால்காவடிகள் வந்து சேரும். ஐப்பசியில் கந்த சஷ்டி விழா ஆறு நாட்களும், வைகாசி விசாகம் ஒரு நாளும் விழா நடத்தப்படும். உள்ளிருக்கும் அம்மையப்பனுக்கு மார்கழி திருவாதிரையில் விழா எடுக்கப்படும். இது தவிர மாத கார்த்திகைகளில் சிறப்பு பூஜை உண்டு. சிறப்பு பூஜை: இங்கு சத்ரு சம்ஹார திரிசதை எனும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. எதிரிகளால் ஏற்படும் துன்பம் தீர இப்பூஜையை நடத்துவார்கள். எதிரிகளால் ஏற்படும் நியாயமான துன்பங்களுக்காக மட்டுமே இப்பூஜையை செய்ய வேண்டும். எதிரிகளை அழிக்கும் நோக்குடன் செய்தால் பலன் வேறு மாதிரியாக அமையும். தேய்பிறை சஷ்டி அல்லது அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் இப்பூஜையை செய்வார்கள். இதற்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். ஆறுமுகங்களுக்கும் நைவேத்தியம், அபிஷேகம், புஷ்ப அலங்காரம் செய்யப்படும்.
சிறப்பு
                    வான்மீகர் என்ற சித்தர் இங்கு தான் சமாதியானார். கோயிலுக்குள் வன்னி மரத்தடியில் இவரது சமாதி இருக்கிறது. பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி. குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞர் வடிவிலும் இவர் காட்சி தருவார்.
திறக்கும் நேரம்
                       காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்
                            பிரகாரத்தில் முருகனுடன் போருக்கு சென்ற நவ வீரர்களுக்கு சிலை இருக்கிறது. கூத்தாடும் கணபதி, ஜுரதேவர், சீனிவாச சவுந்தராஜப்பெருமாள், ஆஞ்சநேயர், மனோன்மணி அம்மை, ஐயப்பன், மகாலட்சுமி, நவகிரகங்கள், சனிபகவான், பைரவர் ஆகியோரும் உள்ளனர்.

பிரார்த்தனை : குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்

                        சுவாமிக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு
                      பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி. குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞர் வடிவிலும் இவர் காட்சி தருவார். சித்ராபவுர்ணமியை ஒட்டி இங்கு விழா நடக்கிறது.கோயில் முன்புள்ள சரவணப்பொய்கை தீர்த்தத்தில் கைபட்டாலே பாவ நிவர்த்தியாகி விடும் சிறப்புடையது. சவுந்தரநாயகர், ஆனந்தவல்லித்தாயார் ஆகியோர் முருகனின் தாய் தந்தையாக அருள்பாலிக்கின்றனர். பயந்த சுபாவமுடைய குழந்தைகளை இத்தலத்துக்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இங்கு முருகன் அம்பறாத் துணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சவுந்தரியம் உடையவனாக திகழ்கிறான். சூரனை அழிப்பதற்காக உள்ள இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விளக்கி சொன்னால் அவர்கள் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

முகவரி

                  அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில், எட்டுக்குடி – 610212 நாகப்பட்டினம் மாவட்டம்

இறைவன் கரபுரநாதர்
புராண பெயர் சோழபுரி, கரபுரம்
கிராமம்/நகரம் உத்தமசோழபுரம்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு
வரலாறு
                  ராவணன் சகோதரன் கரதூசனன், ஆயிரம் ஆண்டு தவம் செய்து அக்னிபிரவேசம் செய்யும் நேரத்தில் “நில்’ என்ற அசரீரி வாக்கு கேட்டு நின்றான். இறைவன் கரதூசனனுக்கு காட்சி அளித்தார். அப்போது இறைவனுக்கு கரதூசனன் பூஜை செய்ததால், “கரபுரநாதர்’ என்ற பெயர் வழங்கப்படுகிறது.திரேதாயுகத்தில் கரபுரம் என்றும், கலியுகத்தில் சோழபுரி  என்றும் கூறப்படும் இத்தலத்தின் சிறப்புகள் பற்றி உத்தமசோழபுரம் கரபுரநாதர் புராணம் என்னும் தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த புராண நூலின் ஆசிறியர் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை.அந்த புராணத்தில், “இங்கு சூரியன், சந்திரன், தேவர், ¬முனிவர் ஆகியோர் நாளும் வணங்கி மகிழ்வர். வரங்களையெல்லாம் கொடுக்கும் தெய்வம் எதிரில் தோன்ற, அதை வணங்காமல் வேறு தலத்தில் சென்று அடையக்கூடிய நற்பயன்களையெல்லாம் இத்தலத்திலேயே பெற்று, இம்மையிலும் மறுமையிலும் பயன் பெறலாம்,’ என்று கூறப்பட்டுள்ளது.

உத்தமசோழபுரம் கரபுரநாதர் இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளார். திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரம், திருமூலர் எழுதிய திருமந்திரம், அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் போன்றவற்றிலும் கரபுநாதர் பற்றிய செய்யுள் இடம் பெற்றுள்ளது.இந்த கோயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வந்து தங்கி இறை வழிபாடு நடத்தியதற்கான கல் வெட்டு ஆதாரம் உள்ளது. அதனால் தான் சோழன் தங்கிய இடத்தை உத்தமசோழபுரம் என்றும், பாண்டியன் தங்கிய இடத்தை வீரபாண்டி என்றும், சேரன் தங்கிய மலை சேர்வராயன் மலை என்றும் வழங்கப்படுகிறது.

திருவிழா

                 12 மாதங்களும் உற்சவம், சுக்ரவார வழிபாடும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கோயில் சண்டிஹோமம், பிரதோஷம் போன்ற வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றது.
சிறப்பு
                    இந்த கோயிலில் உள்ள லிங்கம் ஒரு புறம் சாய்ந்தவாறு உள்ளது. இந்த ஈஸ்வரன் தலத்திற்கு அருகிலேயே ஓடும் திருமணிமுத்தாற்றில் பாண்டிய மன்னன் முத்துக்கள் எடுத்து சென்று, மதுரை மீனாட்சிக்கு மாலையாக போட்டதாகவும், அந்த ¬முத்துமாலை இன்னும் மீனாட்சி கழுத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திறக்கும் நேரம்
                     காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்
                     சோழர் காலத்தில் இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் பணி நிறைவடையவில்லை. தொடர்ந்து தமிழக அரசால் ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த “92ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பிரார்த்தனை

                 திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்கவும், பகை நீங்கவும் இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்
             சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு
                 இந்த கோயிலுக்கு கடந்த 73 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது மரத்தேர் செய்து வெள்ளோட்டம் ஓடி, சித்திரை பவுர்ணமி திதியில் சித்ரா பவுர்ணமி உற்சவம் நடத்தப்பட்டது. அன்றிலிருந்து ஆண்டின் 12 மாதங்களும் உற்சவம், சுக்ரவார வழிபாடும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கோயில் சண்டிஹோமம், பிரதோஷம் போன்ற வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றது.இந்த கோயில் முகப்பு வாயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் அருகே ஒளவை சிலை நிறுவப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே பெரிய ஒளவையார் சிலை ஆகும். இந்த கோயிலின் பழமையும், வரலாற்று சிறப்பும், இலக்கியங்களில் பெற்ற இடம் பெருமைக்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்துள்ளன.

கொல்லிமலையை ஆண்ட பாரி மன்னனின் மக்கள் அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் ஒளவையார் கரபுரநாதர் கோயிலுக்கு அழைத்து வந்து, பகையாளியாய் இருக்கும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பகையை நீக்கி, பாரியின் மக்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததாக ஐதீகம் உண்டு. எனவே தான் சேர, சோழ, பாண்டியனுக்கு கோயிலின் அர்த்த மண்டப கல்தூணில் வில், புலி, மீன் கொடி பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஈஸ்வரன் தலத்திற்கு அருகிலேயே ஓடும் திருமணிமுத்தாற்றில் பாண்டிய மன்னன் முத்துக்கள் எடுத்து சென்று, மதுரை மீனாட்சிக்கு மாலையாக போட்டதாகவும், அந்த முத்துமாலை இன்னும் மீனாட்சி கழுத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குணசீலன் என்ற சிறுவன் கரபுரநாதர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தான். லிங்கம் உயரமாக இருந்ததால் சிறுவனால் மாலை போட முடியவில்லை. இதனால் சிறுவன் கதறி அழுது இறைவனை வேண்டுகிறான். அப்போது கரபுரநாதர் எழுந்தருளி, சிறுவன் உயரத்திற்கேற்றவாறு லிங்கத்தை சாய்த்து கொடுத்தார். அதனால் தான் இன்றும் இந்த கோயிலில் உள்ள லிங்கம் ஒரு புறம் சாய்ந்தவாறு உள்ளது.

முகவரி

                    அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில், உத்தமசோழபுரம் – சேலம் மாவட்டம்.

இறைவன் மணிச்சேறை உடையார்
தீர்த்தம் சுனை தீர்த்தம்
கிராமம்/நகரம் இஞ்சிமேடு
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு
வரலாறு
                  இமயமலைக்கு நிகராக “பெரியமலை’ என்று ஒரு மலை இருந்தது. அந்த மலை அகத்தியர் காலடி பட்டு பூமிக்கடியில் சென்றுவிட்டது. தரை மட்டமான அந்த பகுதியில், ஒரு முனிவர் நவபாஷாணத்தால் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தார். இவரது பக்தியை சோதிக்க நினைத்த இறைவன், ஒரு யானையை அனுப்பினார். முனிவர் தியானத்தில் இருந்த போது, அந்த யானை அருகிலிருந்த குளத்திலிருந்து நீரை எடுத்து முனிவரின் மேல் தெளித்து விளையாடியது. ஆனால், அவரது தியானம் கலையவில்லை. யானை முனிவரின் அருகே சென்றபோது, ஒரு நெருப்பு வளையம் உண்டாகி, அருகில் செல்ல விடாமல் தடுத்தது. தவத்தை மெச்சிய சிவன், முனிவரின் முன்பு தோன்றி வரம் கேட்க சொன்னார். பெரியமலையில் இருந்து அருள் புரிய வேண்டும் என முனிவர் வேண்டிக் கொண்டார். இறைவனும் பெரியமலையில் தங்கினார். அந்த முனிவர் நவபாஷாண லிங்கம் ஒன்றை இங்கு பிரதிஷ்டை செய்தார்.

திருவிழா

                 மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குஉத்திரம், திருக்கார்த்திகை.
சிறப்பு
                இங்கு சிவன் நவபாஷாண லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்
                   காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்
                     பழநியில் முருகனுக்கு போகர் சித்தர் நவபாஷாணத்தால் சிலை அமைத்தது போல, திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேட்டில் உள்ள திருமணிச்சேறை உடையார் கோயிலில் நவபாஷாண லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
                     பெரியமலையில் உள்ள சுனை தீர்த்தத்தை கொண்டுதான் நவபாஷாண லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் நோய்கள் குணமாகிறது. பாம்புக்கடிக்கு சிறந்த மருந்தாக இந்த தீர்த்தம் பயன்படுகிறது. அத்துடன் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த தீர்த்தத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்ற பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

நேர்த்திக்கடன்

                     சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு
                     இந்தக் கோயிலில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பதால் ஏழேழு ஜென்மத்திற்கும் பலன் உண்டு. சிவபார்வதி திருமணம் கயிலாயத்தில் நடந்த போது, சிவன் அகத்தியரிடம் பூமியை சமநிலை செய்யுமாறு கூறினார். அவர் தென்பகுதிக்கு வரும் போது இஞ்சிமேட்டில் வான் நோக்கி உயர்ந்திருந்த பெரியமலையின் மீது ஏறி நின்றார். அடுத்த கணம் இமயமலைக்கு நிகராக இருந்த பெரியமலை பூமியில் அழுந்த, அதன் நுனி மட்டும் வெளியில் நின்றது. அன்று முதல் பெரிய மலை “தென் கயிலாயம்’ என அழைக்கப்படுகிறது.

சிலாத்தியரும் இஞ்சி மேடும்

                          சிலாத்தியர் என்ற முனிவர் தனது கடும் தவத்தால் உடலுடனேயே சொர்க்கம் செல்லும் வரத்தை சிவனிடம் பெற்றார். வழியில் இவரைப் பார்த்த நாரதர், “”உமது மூதாதையர்களுக்கு யாரும் சரிவர திதி கொடுக்காததால் ஆவியாக அலைந்து கொண்டிருக்கின்றனர்,” என்றார். சிலாத்தியர் “மிஞ்சி’என்ற தர்ப்பை புல்லை வைத்து, மூதாதையர்களுக்கு திதி கொடுத்தார். இந்த இடமே காலப்போக்கில் “இஞ்சி’ மேடானது என்கிறார்கள். அன்று முதல் மூதாதையர்களுக்கு, அமாவாசை தோறும் திதி கொடுக்கும் முறை வழக்கத்திற்கு வந்தது. பெரியமலையில் உள்ள சுனை தீர்த்தத்தை கொண்டு தான் நவபாஷாண லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

முகவரி

                        அருள்மிகு திரு மணிச்சேறை உடையார் கோயிலில், பெரணமநல்லூர், இஞ்சிமேடு, திருவண்ணாமலை மாவட்டம்.

 

கோயில் பற்றி

சிவலோக தியாகேசர் உடனுறை திருவெண்ணீற்று உமையம்மை திருக்கோயில் திருநல்லூர் பெருமணம்

( ஆச்சாள்புரம்) என்ற இடத்தில் அமைந்துள்ளது .திருநல்லூர் பெருமணம் ( ஆச்சாள்புரம்) கோயில் திருஞானசம்பந்தர் – 1 பாடல் பெற்றது.

வழி

                             சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலம் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 8 கி. மி.சென்று இந்த சிவஸ்தலம் அடையலாம். சிதம்பரம், சீர்காழியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

கோவில் அமைப்பு

சிவலோக தியாகேசர் ஆலயம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளை உடைய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. இராஜ கோபுரத்தின் வாயிலாக உள்ளே நுழைந்தவுடன் நந்தி மண்டபமும் அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் அவர் மனைவி ஸ்தோத்திர பூராணாம்பிகையுடன் மணக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார். அதை அடுத்து கிழாக்கு நோக்கிய சிவலோக தியாகேசர் சந்நிதியும் இறைவி திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதியும் அமைந்துள்ளன.

திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு உமையம்மையே நேரில் வந்து திருநீறு அளித்ததால் அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற பெயர் ஏற்பட்டது. இறைவியின் சந்நிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசிகொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை. வருடம் தோறும் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சம்பந்தரின் திருமண திருவிழா நடக்கிறது.

நமச்சிவாய திருப்பதிகம்: திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். இத்தகைய சிறப்பு மிக்க சம்பவம் நடைபெற்ற பெருமை உடைய சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயம்.

திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

விபரங்கள்
தகவல்கள்
300x250banner.jpg