மாலை நேர உணவருந்தக் கூடாது ஏன்?

மாலை நேரம் உணவருந்த வேண்டாம் என்று முதியோர்கள் அடுத்த தலைமுறையை போதித்துள்ளனர்.ஒளி மங்கி இருள்வரும் நேரமானதால் அந்த நேரம் இறைவனை ஆராதிப்பதற்காக ஒதுக்கி வைக்கப்படவேண்டிய நேரம். அதனால் அந்நேரம் உணவருந்தக்கூடாதென்று கூறப்படுகிறது என்றது பொதுக் கருத்து.
ஆனால் இதன் நிஜமான காரணமோ வேறு. ஆயுளும், உடல்நலமும் நிலைநிறுத்த சுத்தமான உணவு உட்கொள்வது எல்லா ஜீவராசிகட்கும் மிக முக்கியம். அந்த உணவு அருந்த வேண்டிய முறையையும் நேரத்தையும் கூட ஆசாரியர் தெளிவாக போதனை செய்துள்ளனர். இப்போதனைகள் அவர்கள் நீண்ட காலத்து அனுபவத்தின் அடிப்படையில் தந்துள்ளனர். சூரியன் மறையும் நேரத்திக்குப் பின் இருட்டு பரவத் தொடங்கும் நேரமே மாலைப் பொழுது நவீன காலத்தைப் போல மின் விளக்குகள் இல்லாத காலத்தில், மங்கிய வெளிச்சத்திலிருந்து உணவருந்தும் போது விஷ- அம்சங்களும், அசுத்தங்களும் உணவில் படிந்து கொள்ள இயலும்.
சூரியன் மறைவதனால் இயற்கையில் கண்டு வரும் வேதிமாற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. கிழங்கு வகைகளும் கீரைகளும் உணவின் முக்கிய அம்சமாயிருந்த காலத்தில் இவை மாலைப்பொழுதில் பயன்படுத்துவது நல்லதல்ல என்று முன் தலைமுறை கண்டறிந்திருந்ததனால் மாலைப்பொழுது உணவருந்த வேண்டாம் என்று போதித்திருந்தனர்.

