மறுபிறப்பைப் பொருத்தவரை எல்லோருக்கும் பொருந்தக் கூடிய பொது விதி என்று ஏதும் கிடையாது. சிலர் கிட்டத்தட்ட உடனேயே திரும்பப் பிறக்கிறார்கள். தம் குழந்தைகளிடம் மிகவும் பற்றுதல் வைத்துள்ள பெற்றோர்களுக்கு பெரும்பாலும் இப்படி நடக்கிறது. அவர்கள் இறக்கும்போது, அவர்களில் ஒரு பாகம் அவர்களுடைய குழந்தைகளிடம் ஒன்றிக் கொள்கிறது. சிலர் மறுபிறப்பு எடுக்க நூற்றாண்டுகள் அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூடப் பிடிக்கலாம். தமக்குப் பொருத்தமான சூழலை அளிக்கக் கூடிய வாய்புகள் பக்குவமடையும் வரை அவர்கள் காத்திருக்கிறார்கள்.



This ifnomrtaoin is off the hizool!