
அநேகதங்கா பதேஸ்வரர் உடனுறை காமாட்சி அம்மன் திருக்கோயில் கச்சி அநேகதங்காபதம் என்ற இடத்தில் அமைந்துள்ளது .கச்சி அநேகதங்காபதம் கோயில் சுந்தரர் – 1 பாடல் பெற்றது.
வழி
காஞ்சிபுரம் நகரில் இருந்து வடமேற்கே 3 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் இருக்கின்றன.
கோயில் பற்றி
அநேகதங்காபதம் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. ஒன்று வடநாட்டில் ஹரித்வார் – கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள கெளரிகுண்டம் சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டும். மற்றொன்று காஞ்சீபுரத்திலுள்ள இத்தலம்.
| இறைவன் | அன்னகாமு |
| கிராமம்/நகரம் | ஒட்டன்சத்திரம் |
| மாவட்டம் | திண்டுக்கல் |
| மாநிலம் | தமிழ்நாடு |
திருவிழா
பிரார்த்தனை
திருமணம் ஆகாதவர்களுக்கும் விரைவில் திருமணம் கூடும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் நிலவி வருகிறது.
நேர்த்திக்கடன்
முகவரி
| இறைவன் | முருகன் |
| தல மரம் | வன்னி மரம் |
| தீர்த்தம் | சரவணப்பொய்கை தீர்த்தம் |
| கிராமம்/நகரம் | எட்டுக்குடி |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
திருவிழா
பிரார்த்தனை : குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்
முகவரி

திருமணம் என்றாலே ‘ஜாதகப் பொருத்தம்’ பார்க்க வேண்டும், என்று இரண்டு குடும்பத்தாரும் அந்த ஜோசியர், இந்த ஜோசியர் என்று ஜாதகத்துடன் புறப்பட ஆரம்பித்துவிடுகிறார்கள். திருமணத்திக்கு ஜாதகப் பொருத்தம் அவசியம்தானா?
| இறைவன் | கரபுரநாதர் |
| புராண பெயர் | சோழபுரி, கரபுரம் |
| கிராமம்/நகரம் | உத்தமசோழபுரம் |
| மாவட்டம் | சேலம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
இந்த புராண நூலின் ஆசிறியர் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை.அந்த புராணத்தில், “இங்கு சூரியன், சந்திரன், தேவர், ¬முனிவர் ஆகியோர் நாளும் வணங்கி மகிழ்வர். வரங்களையெல்லாம் கொடுக்கும் தெய்வம் எதிரில் தோன்ற, அதை வணங்காமல் வேறு தலத்தில் சென்று அடையக்கூடிய நற்பயன்களையெல்லாம் இத்தலத்திலேயே பெற்று, இம்மையிலும் மறுமையிலும் பயன் பெறலாம்,’ என்று கூறப்பட்டுள்ளது.
உத்தமசோழபுரம் கரபுரநாதர் இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளார். திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரம், திருமூலர் எழுதிய திருமந்திரம், அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் போன்றவற்றிலும் கரபுநாதர் பற்றிய செய்யுள் இடம் பெற்றுள்ளது.இந்த கோயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வந்து தங்கி இறை வழிபாடு நடத்தியதற்கான கல் வெட்டு ஆதாரம் உள்ளது. அதனால் தான் சோழன் தங்கிய இடத்தை உத்தமசோழபுரம் என்றும், பாண்டியன் தங்கிய இடத்தை வீரபாண்டி என்றும், சேரன் தங்கிய மலை சேர்வராயன் மலை என்றும் வழங்கப்படுகிறது.
திருவிழா
பிரார்த்தனை
கொல்லிமலையை ஆண்ட பாரி மன்னனின் மக்கள் அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் ஒளவையார் கரபுரநாதர் கோயிலுக்கு அழைத்து வந்து, பகையாளியாய் இருக்கும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பகையை நீக்கி, பாரியின் மக்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததாக ஐதீகம் உண்டு. எனவே தான் சேர, சோழ, பாண்டியனுக்கு கோயிலின் அர்த்த மண்டப கல்தூணில் வில், புலி, மீன் கொடி பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஈஸ்வரன் தலத்திற்கு அருகிலேயே ஓடும் திருமணிமுத்தாற்றில் பாண்டிய மன்னன் முத்துக்கள் எடுத்து சென்று, மதுரை மீனாட்சிக்கு மாலையாக போட்டதாகவும், அந்த முத்துமாலை இன்னும் மீனாட்சி கழுத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குணசீலன் என்ற சிறுவன் கரபுரநாதர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தான். லிங்கம் உயரமாக இருந்ததால் சிறுவனால் மாலை போட முடியவில்லை. இதனால் சிறுவன் கதறி அழுது இறைவனை வேண்டுகிறான். அப்போது கரபுரநாதர் எழுந்தருளி, சிறுவன் உயரத்திற்கேற்றவாறு லிங்கத்தை சாய்த்து கொடுத்தார். அதனால் தான் இன்றும் இந்த கோயிலில் உள்ள லிங்கம் ஒரு புறம் சாய்ந்தவாறு உள்ளது.
முகவரி
| இறைவன் | மணிச்சேறை உடையார் |
| தீர்த்தம் | சுனை தீர்த்தம் |
| கிராமம்/நகரம் | இஞ்சிமேடு |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| மாநிலம் | தமிழ்நாடு |
திருவிழா
நேர்த்திக்கடன்
தல சிறப்பு
சிலாத்தியரும் இஞ்சி மேடும்
முகவரி

கோயில் பற்றி
சிவலோக தியாகேசர் உடனுறை திருவெண்ணீற்று உமையம்மை திருக்கோயில் திருநல்லூர் பெருமணம்
( ஆச்சாள்புரம்) என்ற இடத்தில் அமைந்துள்ளது .திருநல்லூர் பெருமணம் ( ஆச்சாள்புரம்) கோயில் திருஞானசம்பந்தர் – 1 பாடல் பெற்றது.
வழி
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலம் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 8 கி. மி.சென்று இந்த சிவஸ்தலம் அடையலாம். சிதம்பரம், சீர்காழியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
கோவில் அமைப்பு
சிவலோக தியாகேசர் ஆலயம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளை உடைய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. இராஜ கோபுரத்தின் வாயிலாக உள்ளே நுழைந்தவுடன் நந்தி மண்டபமும் அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் அவர் மனைவி ஸ்தோத்திர பூராணாம்பிகையுடன் மணக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார். அதை அடுத்து கிழாக்கு நோக்கிய சிவலோக தியாகேசர் சந்நிதியும் இறைவி திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதியும் அமைந்துள்ளன.
திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு உமையம்மையே நேரில் வந்து திருநீறு அளித்ததால் அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற பெயர் ஏற்பட்டது. இறைவியின் சந்நிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசிகொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை. வருடம் தோறும் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சம்பந்தரின் திருமண திருவிழா நடக்கிறது.
நமச்சிவாய திருப்பதிகம்: திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். இத்தகைய சிறப்பு மிக்க சம்பவம் நடைபெற்ற பெருமை உடைய சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயம்.
திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

| இறைவன் | அகத்தீஸ்வரர் |
| இறைவி | லோபமுத்திரை |
| கிராமம்/நகரம் | அம்பாசமுத்திரம் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
அகத்தியரின் மனைவி லோபமுத்திரை, தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவர் அம்பிகையைப் போலவே வலது கையில் பூச்செண்டு வைத்திருக்கிறாள். நவராத்திரி விழாவின்போது 9 நாட்களும் இவளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது.திருக்கல்யாண விழா
| இறைவன் | மாசாணியம்மன் (மயானசயனி ) |
| தீர்த்தம் | கிணற்றுநீர் தீர்த்தம் |
| கிராமம்/நகரம் | பொள்ளாச்சி, ஆனைமலை |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
திருவிழா
ராமர் வழிபாடு
பெயர்காரணம்
பெண்களின் அம்மன்
முகவரி

| இறைவன் | வீரட்டேசுவரர் , கிருத்திவாசர் |
| இறைவி | இளங்கிளைநாயகி |
| தல மரம் | தேவதாரு,வன்னி |
| தீர்த்தம் | பாதாளகங்கை |
| புராண பெயர் | தாருகா வனம் |
| கிராமம்/நகரம் | திருவழுவூர் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
திருவிழா
மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.நேர்த்திக்கடன்
தல சிறப்பு : இத்தலத்தின் விசேச மூர்த்தி இந்த கஜசம்கார மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்த கோயில்களிலும் கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது.திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்காரமூர்த்தி விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனை தன் இடுப்பில் வைத்துள்ள உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார். கையிலுள்ள முருகனோ தன் தந்தையை ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுகிறார். சிவனுக்கும், நந்திக்கும் இடையில் பஞ்சபிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது எங்குமில்லாத தனிசிறப்பு. இத்தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப்பேறு கிட்டும். ஆணவம் நீங்கினால், ஞானம் கிடைக்கும். அம்மன் சன்னதி முன்புள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் கல்வியறிவு பெருகும். சிதம்பரத்தில் சிதம்பர ரகசிய பிரதிஷ்டை உள்ளது போல் இங்கும் கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள்.பெருமான், உமையஞ்ச ஆனையை உரித்ததை இத்திரு உருவத்தில் காணலாம். சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம். சம்காரமூர்த்தி இருக்கும் இடம் ஞான சபை ஆகும்.
சனிபகவான்
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்( வைப்புத்தலம்).
திருவல்லிக்கேணி_தீர்த்தபாலீஸ்வரர் -
| இறைவன் | பார்த்தசாரதி |
| இறைவி | ருக்மிணி |
| தல மரம் | மகிழம் |
| தீர்த்தம் | கைரவிணி புஷ்கரிணி |
| புராண பெயர் | பிருந்தாரண்ய க்ஷேத்ரம் |
| கிராமம்/நகரம் | திருவல்லிக்கேணி |
| மாவட்டம் | சென்னை |
| மாநிலம் | தமிழ்நாடு |

திருவிழா : ஸ்ரீ பார்த்தசாரதி லட்சார்ச்சனை – பிப்ரவரி – 10 நாட்கள் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவின் போது கோயிலில் கூடுவர் பிரம்மோற்ஸவம்- ஏப்ரல் – 10 நாட்கள் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் வைகுண்ட ஏகாதேசி மற்றும் புது வருடப் பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிக்கிறார்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவி தனக்கு இறைவன் தன்துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம் வன்துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என்துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக் கேணி கண்டேனே.
-திருமங்கையழ்வார்
முகவரி : நிர்வாக அதிகாரி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை-600 005
| இறைவன் | ரத்தினகிரி முருகன் |
| கிராமம்/நகரம் | சரவணம்பட்டி |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
சிவனை நோக்கி யுகங்கள் பல கடுந்தவம் இருந்து அண்டசராசரங்களையும்அழிவிலாது அடக்கி ஆளும்படி வரம் பெற்ற அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனது இன்னல்களுக்கு பயந்த தேவதலைவன் இந்திரன் உட்பட தேவர்கள் அனைவரும் அசுரனின் கண்ணுக்கு புலப்படாமல் ஒளிவுமறைவாக வசித்து வந்தனர். அப்போது ஓர் முறைஇந்திரன் மறைந்திருந்ததைக் கண்ட அசுரன் அவரை துன்புறுத்துவதற்காக வந்தான்.இதனை அறிந்த இந்திரன் அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். அவ்வாறு ஓடி வந்த அவர் ரத்தினகிரி மலையின் மீது ஏறி மறைந்து கொள்ள இடம் தேடினார். அப்போது அங்கு இந்திரனுக்கு காட்சி தந்த குமரக்கடவுள் அவரை தனது வாகனமான மயிலாக மாற்றிக் கொண்டார். அங்கு இந்திரனைத் தேடி வந்த அசுரன் அவர் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றான். இவ்வாறு அசுரனிடமிருந்து இந்திரனைக் காப்பதற்காக அவரை தனது மயில் வாகனமாக முருகன் மாற்றிக்கொண்ட அற்புதம் நிகழ்ந்தது இந்த ரத்தினகிரி மலையில் என புராண வரலாறு கூறுகிறது.
திருவிழா
பிரார்த்தனை
நேர்த்திக்கடன்
அவர் கூறியதை பொறுமையுடன் கேட்ட அச்சிறுவன் கோயிலில் இருந்த விபூதியை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு பக்தியுடன் சுவாமியை வலம் வரும்படி கூறினான். அதன்படி அப்பெண் பக்தை விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை வலம் வந்தார். சுவாமியை ஒரு முறை வலம் வந்த அவர் தன்னிடம் விபூதி கொடுத்த சிறுவனைக் காணாது அதிர்ந்தார். இச்சம்பவம் நிகழ்ந்த சில தினங்களிலேயே அப்பெண் கருவுற்றார். அதன் பின்பே அவரிடம் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து பேசியது முருகப்பெருமான் தான் என அறிந்து கொண்டார். முருகனே நேரில் வந்து பெண் பக்தைக்காக அருள்புரிந்து அற்புதம் நிகழ்த்திய சிறந்த தலம்.இத்தலத்தில் உள்ள முருகன் நான்கு கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தியபடி இடதுபுறம் நோக்கிய மயிலுடன் பிரபாவளையத்துடன் அருட்காட்சி தருகிறார்.
பூப்பறிக்கும் சடங்கு
எப்படியிருப்பினும், இக்கோயிலுக்கு வருபவர்கள் தங்கள் கையாலேயே மலர் பறித்து, மாலை கட்டி முருகனுக்கு அணிவித்தால் நினைத்த கணவன் அல்லது மனைவியை அடையலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்றளவும் இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு தம்பதி சமேதராக வந்து வணங்கிச் சென்றால் நல்ல குழந்தைகள் பிறக்கும் என்பதும் நம்பிக்கை.பள்ளிக்காலத்து நண்பர்கள் பணி காரணமாக வேறு ஊரில் இருந்தால், பொங்கலன்று தங்கள் ஊருக்கு வந்து விடுகின்றனர். அவர்கள் பொங்கலுக்கு மறுநாள் மலைக்கோயிலுக்கு வந்து தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கமும் இருக்கிறது.
முகவரி
| இறைவன் | ருத்ரகோடீஸ்வரர் |
| இறைவி | ஆத்மநாயகி |
| தல மரம் | எலுமிச்சை |
| தீர்த்தம் | சூரிய, சந்திர தீர்த்தம் |
| புராண பெயர் | மட்டியூர் |
| கிராமம்/நகரம் | சதுர்வேதமங்கலம் |
| மாவட்டம் | சிவகங்கை |
| மாநிலம் | தமிழ்நாடு |
பிரம்மாவுக்கு படைப்புத்ö தாழிலில் இவர்கள் உதவி செய்வார்கள். கோடி ருத்ரர்களும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து பூஜித்தனர். கோடி ருத்ரர்களும் வணங்கிய இந்த லிங்கத்திற்கு , “ருத்ர கோடீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது.
திருவிழா
நைவேத்யம் : தோசை
ராஜகோபுரம் : ஐந்துநிலை
பிரார்த்தனை : குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்
சூரிய பூஜை
பாடியவர்கள் : முத்துவடுகு சித்தர்.
முகவரி : அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில், சதுர்வேதி மங்கலம், சிவகங்கை மாவட்டம்.
| இறைவன் | தேனுபுரீஸ்வரர் |
| இறைவி | தேனுகாம்பாள் |
| தல மரம் | வில்வம் |
| தீர்த்தம் | கபில தீர்த்தம் |
| புராண பெயர் | மாடையம்பதி |
| கிராமம்/நகரம் | மாடம்பாக்கம் |
| மாவட்டம் | சென்னை |
| மாநிலம் | தமிழ்நாடு |
திருவிழா
| இறைவன் | சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி) |
| இறைவி | அமிர்த வல்லி, சுந்தர வல்லி |
| தல மரம் | புளியமரம் |
| தீர்த்தம் | மாமாங்கம் |
| புராண பெயர் | புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி |
| கிராமம்/நகரம் | சென்னிமலை |
| மாவட்டம் | ஈரோடு |
| மாநிலம் | தமிழ்நாடு |
சிறப்பு : கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது. மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : சத்தியஞானி புண்ணாக்கு சித்தர். மலைமேல் இவர் குகை உள்ளது. அம்மன் சந்நிதியிலிருந்து பின்புறம் சென்றால் மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின் நாக்கு சித்தர் (புண்ணாக்கு சித்தர் கோயில் வேல்கள் நிறைந்து வேல்கோட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகே சரவணமாமுனிவரின் சமாதிக் கோயிலும் உள்ளது.
இங்கு விநாயகர் திருச்சந்தி விநாயகரõகவும், காவல் தெய்வமாக இடும்பன் அருள்பாலிக்கிறார்கள் .
சென்னிமலையின் விளக்கம் : சென்னிமலை (சிரகிரி – சிரம் சென்னி, கிரி-மலை)
பிரார்த்தனை : கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது.
இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.
இயற்கை மூலிகை மரங்கள் செடி கொடிகள் நிறைந்த மலையாக இருப்பதால் இங்கு வரும் ரத்தகொதிப்பு ஆஸ்துமா நெஞ்சுவலி நோய்கள் உடையவர்கள் குணமாகிறார்கள். இது இத்தலத்துக்கு அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை என தெரிவிக்கிறார்கள்
நேர்த்திக்கடன் : முருகனுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது. தவிர காவடிஎடுத்தல், முடிக்காணிக்கை முதலியன, கிருத்திகை அன்னதானம், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்கி காது குத்தல் சஷ்டி விரதம் இருத்தல். தவிர சண்முகார்ச்சனை, முருக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்காக செய்யலாம்.
தல சிறப்பு : மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது.
இது ஒர் மலைக்கோயில் இதன் உயரம் 1740 அடி, படிகள் 1320.
அதிசயத்திலும் அதிசயமாக இரட்டை மாட்டு வண்டி 1320 திருப்படிகள் வழியே தங்கு தடையின்றி ஏராளமான செங்குத்தான வளைவுகள் உள்ள பாதை வழியே மலையேறிய அதிசயம் நடந்தது.
சிறப்பு மிகுந்த சஷ்டி விரதம் : குழந்தை வரம் வேண்டுவோர் முறையாக சஷ்டி விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்.
சிரசுப் பூ உத்திரவு கேட்டல் : திருமணம், வரன்கள், விவசாயம், கிணறுவெட்டுதல், புதிய வியாபாரம் தொடங்கல், வியாதிகள் ஆகியவை குறித்து முடிவு செய்ய ஆண்டவர் முன்னால் அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்திரவு கேட்டு நல்ல உத்திரவு கிடைத்தபின்பு காரியத்தை தொடங்குகிறார்கள். சிரசுப்பூ உத்திரவு நல்லபடியாக கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் தொடங்குவதில்லை.
முருகன் நடுநாயகமாக, மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்து மூலவரைச் சுற்றி எட்டு நவகிரகங்கள் உள்ளன. மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு.
கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம்.
வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது.
அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம்.
முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம்.
இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழி காட்டிய தலம்.
அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை. இவர் மிகவும் விசேஷமானவர். கோயிலுக்கு பின்புறம் பிண்ணாக்கு சித்தர் குகை உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத வேங்கை மரத் தேர் இத்தலத்தில் உள்ளது.
அடர்ந்த மரங்கள் அடர்ந்த மலை மீது அமைந்துள்ள மிக அழகான அமைதியான சிறப்பு வாய்ந்த கோயில்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சென்னிமலை – 638 051 ஈரோடு மாவட்டம்








