அசுவத்தாமன் இறந்து விட்டான் என்று பொய் சொன்னதால் தருமருக்கு நரகத்திற்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், “நீங்கள் இங்கு வந்ததால் எங்கள் வேதனை பெருமளவில் குறைந்தது. நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று வேண்டினர். ஆனால் அவரைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல விமானம் ஒன்று வந்தது. தருமர், ” நான் இதுவரை செய்த புண்ணியங்கள் அனைத்தையும் இவர்களுக்குத் தருகின்றேன். அதன் பலனாக இவர்கள் சொர்க்கம் செல்லட்டும்’ என்கிறார். உடனே விமானத்தில் அனைவரையும் ஏற்றிக் கொண்டு அவரையும், சொர்க்கத்திற்கு அழைத்தனர். “நாந்தான் என் புண்ணியங்களையே தானமாகக் கொடுத்து விட்டேனே, சொர்க்கத்திற்குள் நுழைய என்ன தகுதி, இருக்கிறது?’ என்று கேட்டார். தருமர். “தாங்கள் புண்ணியங்களையே தானம் செய்தால் அவை பல கோடிப் புண்ணியங்களாகப் பெருகி விட்டன. அதனால் சொர்க்கத்திற்கு வரும் தகுதி உங்களுக்கு இருக்கிறது. வாருங்கள்.” என்று அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

விபரங்கள்
தகவல்கள்
300x250banner.jpg