பாதுகாப்பின் சின்னமாகவே திலகம் அணிவது பொட்டு வைப்பது என்பதே இதன் மறுபெயர். உடலின் வெவ்வேறு பாகங்களில் பொட்டுவைப்பதுண்டானாலும், பொதுவாக நெற்றியில் அணிவதே திலகம் என்று சிறப்பித்து வருகின்றோம். திருநீர்,குங்குமம்,களபம், கோபிசந்தனம் என்ற பிருந்தாவனத்திலுள்ள மண் என்பவை திலகம் அணிய உபயோகிப்பதுண்டு. அழகுக்காகவே பொட்டு வைக்கின்றனர். என்றாலும் அது ஒருவகை பாதுகாப்பாகும்.அந்தந்த இஷ்ட தேவதைகளுடைய சின்னம் அணிந்து உபாசனை நிறைவேற்ற வேண்டும் என்பது விதி. இதைத் திலக விதி என்றழைக்கின்றனர். வாக்குறுதி, உண்மை, தூய்மை,மந்திர ஜெபம்,யாகம், ஹோமம், புனிதப் பயணம்,மாலைக் கருமம், தேவதரிசனம்,பூஜை இவை திலகம் அணியாமல் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அப்படிச் செய்பவர்கள்,விபத்து,நோய்,அகால மரணம், என்பவைக்கு ஆளாக வேண்டியதாகும் என்று விசுவாசிக்கின்றனர். நெற்றியில் அல்லாமல் கழுத்திலும், மார்ப்பிலும், கொப்புழிலும்,பின்னாலும், இடவலப்பக்கங்களிலும், இட வல காதுகளிலும், தலையிலும், பின் கழுத்திலும் பொட்டுவைக்கும் போதும் குறிப்பிட்ட பலன் கிடைப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மோதிர விரல் சாந்தியும் நடுவிரல் நீடித்த ஆயுளும்,பெருவிரல் படைப்பும்,ஆள்க் காட்டிவிரல் மோட்சகாரணமும் ஆகும் என்பதே கணக்கு. ஆனால் சுண்டு விரல் மற்றும் நகத்தால் பொட்டுவைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.



THX that’s a great asnewr!