உட்கார்ந்த நிலையில் உணவருந்த வேண்டும் என்பது ஏன்?
உணவருந்தும் கலாச்சாரம் மாறி வர இன்று நம்நாட்டில் நடந்தும் நின்று கொண்டும் உணவருந்துகின்றோம். குழந்தைகளுக்கும் அவ்வாறே உண்ணப் பழக்குகின்றோம்.
சாணம் பூசிய தரையில் பனயோலைத் தடுக்கில் சப்பணமிட்டு உட்கார்ந்து முன்பக்கப் பார்வையுடன் உணவருந்த வேண்டும் என்பது தொன்று தொட்டுள்ள பழக்கம். தரையில் பல கையிட்டு அதில் சப்பணமிட்டு அமர்ந்தும் நம் நாட்டினர், உணவருந்துகின்றனர். ‘ஷீஸ்’களைக் கழற்றாமல் காலின் மேல் கால் வியத்து டைனிங் டேபிலுக்கு முன்னிலிருந்து டெலிவிஷன் நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டே உணவருந்துவதை விட நம் முன்னோர்கள் பாணி அழகுள்ளது. அவ்வாறு அமர்ந்து உண்பதில் உடலுக்கு சில பயன்கள் உள்ளதாக நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர். ஆனால் சுக போகங்களின் நடுக்கடலில் அலைந்து திரியும் நவீன மக்கள்,இந்த வாழ்க்கை இறைவன் அருளியது என்பதை உணர்வதில்லை.


