வலது கால் வைத்து ஏன் நுழைய வேண்டும்?

நம் முன்னோர்கள் வலதுக்கு மிக அதிகம் முக்கியத்துவம் அளித்துள்ளனர். வலது பக்கம் திருப்பி எழ வேண்டும்,வலது கால் வைத்து நுழைய வேண்டும். வலதுகையால் உணவருந்த வேண்டும் இவ்வாறு வலதுக்கு மிக முக்கியத்துவம் இருந்து வருகின்றது.
இடது கையால் தண்ணீர் குடிக்கும் குழந்தைகளையும் பாட்டிமார் கண்டிப்பதுண்டு. வலது பக்கத்தால் செய்யப்படும் செயல்களும் வெற்றிபெறும் என்ற எண்ணமும் மனதில் கொண்டிருக்கிறோம்.
ஒரு வீட்டிக்குள் நுழையும் போது வலது கால் வைத்துச் செல்ல வேண்டும் என்பது விதிமுறை. இவ்வாறு செய்யத்தவறினால் செல்பருக்கும் வீட்டுக்காரருக்கும் துன்பமுண்டாகும். மனித உடலில் வலது பக்கம் மிக முக்கியமானது என்பது எவருக்கும் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு நபர் வலது காலை அழுத்தி மிதித்து நடக்கும் போதே அவர் வெற்றியின் பாதையில் செல்கின்றார் என்று புரிந்து கொள்ளலாம்.ஆன்மீகமாக சிந்தித்துப் பார்த்தாலும் வலது சக்திக்கு தனிப்பட்ட வருணை இருப்பதை காணலாம். ஒரு மனிதனை சோதனை செய்து பார்க்கும் போது அவனது வலது பாகத்து முக்கிய நரம்புகளின் செயல்பாடுகள் அவனை கூடுதல் கடமைகளைச் செய்ய வல்லவனாகக்குகின்றன என்பதை காணலாம். அதாவது வலது பாகத்தால் திறமையுடன் செயல்படலாம் என்று பொருள். மனநிலையும் வலது பாகத்தை சார்ந்திருக்கின்றது. வலது கால் வைத்து பிரவேசித்து, அதேபோல் வெளியேறுவதும் சுபலட்சனம் என்று கருதுகின்றோம். மனசாஷ்திரமும் இதை ஆமோதிக்கின்றது.

